Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு ரிசல்ட் அறிவிக்க தாமதம்.. கொதித்துப்போய் எஸ்.பியை முற்றுகையிட்ட செய்தியாளர்கள். என்னாச்சு?

செய்தியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரப்பூர்வமாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் அறிவிக்க தாமதம் ஏற்பட்டு வருவதாக செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசி விளக்கம் அளித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Electoral officer and district collector talk with press peopla in erode vote counting centre

ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை 16 மேசைகளில் மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.

சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 19,867 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 7,324 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 1,146, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 178 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் செய்யப்பட்டு வருவதால், காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் மைக்கில் விளக்கம் அளித்துப் பேசினார். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் தேர்தல் அலுவலர் மற்றும், அப்சர்வர் உள்ளிட்டோரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. 20 நிமிடங்களுக்குள் முடிவுகள் ஜெராக்ஸ் காப்பியை செய்தியாளர்களுக்கு தருவோம் என்றார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், வாக்கு எண்ணிக்கையை ஒவ்வொரு பெட்டிகளாக சரிபார்த்து வெளியிடுவதால் தாமதம் ஏற்படுகிறது என்றும், சரிபார்க்காமல் வெளியிட்டால் தவறு நிகழ வாய்ப்புள்ளது என்றும், எனவே செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+