ஈரோட்டில் அரசு பள்ளி மாணவிகள் திருச்சியில் எப்படி? மாரியம்மன் கோயிலில் யார்னு பாருங்க! சபாஷ் போலீஸ்
ஈரோடு: தமிழகம் முழுதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28ல் தொடங்கியது. நேற்றைய தினம் அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்துவிட்டன.. இறுதி நாளான நேற்று சமூக அறிவியல் பாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.. அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வை முடித்துவிட்டு அவரவர் வீடு சென்ற நிலையில், இதில், 5 மாணவிகள் மட்டும் திடீரென மாயமானதால், ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது.. நேற்றுதான், கடைசி தேர்வு.. சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்துள்ளது.. எனவே தமிழகம் முழுவதுமுள்ள மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு நேற்றுடன் எழுதி முடித்துள்ளனர்.
அந்தவகையில், ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் ஏராளமான மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.. இதில், நேற்று மதியம் தேர்வு முடித்துவிட்டு மற்ற மாணவிகளுடன் சேந்து 5 மாணவிகளும் வெளியே வந்துள்ளனர்..

மாயமான மாணவிகள்
இதில் 4 மாணவிகள் பவானியை சேர்ந்தவர்கள், ஒரு மாணவி மட்டும் சித்தோடு பகுதியை சேர்ந்தவராம்.. ஆனால், இந்த 5 பேருமே அவரவர் வீட்டுக்கு செல்லவில்லை.. கடைசி தேர்வு என்பதாலும், இன்றுமுதல் விடுமுறை என்பதாலும், மாணவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அல்லது எங்காவது கடைகளுக்கு சென்று விட்டு வரலாம் என்று அவரவர் பெற்றோர்களும் நினைத்துள்ளனர்.
ஆனால் இரவு வரை வீட்டுக்கு பிள்ளைகள் வராமல் போனதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. இதனால் இரவு 8 மணிக்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், பள்ளிக்கே சென்று விசாரித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், தேர்வு எழுதிவிட்டு மதியமே எல்லாரும் கிளம்பி சென்றுவிட்டதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமடைந்த பெற்றோர்
இதைக்கேட்டு மேலும் பதற்றமடைந்த 5 மாணவிகளின் பெற்றோர்களும் தங்களது உறவினர்கள், தங்கள் மகள்களின் தோழிகள் வீடுகளிலும் சென்று தேடினார்கள்.. எனினும் 5 மாணவிகளுமே கிடைக்கவில்லை. இதனால் 5 பெற்றோரும் பவானி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்கள்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்..
முதலில் மாணவிகளின் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர்.. அப்போது மாணவிகள் 5 பேரும் மதியம் 1.20 மணிக்கே பள்ளியிலிருந்து வெளியேறியது தெரியவந்தது.. பிறகு, எந்த வழியாக சென்றனர்? அவர்களுடன் வேறு யாராவது சென்றார்களா? என்ற விசாரணை நடந்தது. அந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.. பிறகு, மாணவிகளிடம் செல்போன் இருக்கிறதா? என்று பெற்றோர்களிடம் போலீசார் விசாரித்தனர்..
செல்போன் சிக்னல்கள்
இறுதியில் அவர்கள் வைத்திருந்த செல்போன்களின் சிக்னல்கள் மூலம் திருச்சியில் இருப்பதை கண்டறிந்தனர்.. உடனடியாக விரைந்து சென்ற போலீசார், காணாமல் போன மாணவிகளை திருச்சியில் மீட்டனர்.. இவர்கள் 5 பேருமே நேற்று கடைசித்தேர்வை எழுதிவிட்டு திருச்சி சமயபுரத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள்.. தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.. ஆனால், தங்களது பெற்றோருக்கு தகவல் தராமல் சமயபுரத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
பிறகு மீட்கப்பட்ட 5 மாணவிகளையும் பவானி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு, 5 பேரையுமே அவரவர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications