ஈரோடு இடைத்தேர்தல்.. எண்ணெய் தேய்த்தாலே மை அழிகிறதா? அதிமுக புகாருக்கு தேர்தல் அலுவலர் விளக்கம்
ஈரோடு கிழக்கில் மை அழிவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் வாக்களித்துச் சென்றவர்கள் விரலில் எண்ணெய் தேய்த்தாலே மை அழிவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலுக்காக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுகவில் இருந்து தென்னரசு போட்டியிடுகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து மேனகா களமிறங்குகிறார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த 77 பேரில் யார் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாக இருப்பார் என்பதைத் தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

அதிமுகவினர் புகார்
இதற்கிடையே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அதிமுக சார்பில் பரபர புகார் முன்வைக்கப்பட்டது. அதாவது பொதுவாகத் தேர்தலின் பொது வாக்களித்துவிட்டு வந்த நபர், மீண்டும் கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க அவர்களின் விரல்களில் மை வைக்கப்படும். இந்த மையை அழிக்கவே முடியாது. சில நாட்கள் இந்த மை அப்படியே விரலில் தான் இருக்கும். அதன் பின்னரே அது மெல்ல அழியும். அந்தளவுக்கு வலிமையானதாக இருக்கும்.

விளக்கம்
இருப்பினும், இன்று காலை ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுப் போட்டவர்களுக்கு அடையாளமாக வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகாரை முன்வைத்தது. வாக்களித்துச் சென்றவர்கள் விரலில் எண்ணெய் தேய்த்தாலே மை அதிமுகவினர் அழிவதாகக் குற்றஞ்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இன்று காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த புகார் குறித்தும் விளக்கமளித்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்
செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், "ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இப்போது வரை வாக்குப்பதிவில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஏதோ ஒரு சில இடங்களில் தேர்தலில் வைக்கப்படும் மை அழிவதாக எல்லாம் புகார் கூறியிருந்தனர். அதில் உண்மையில்லை. நானே வாக்களித்துவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறேன்.

பிரச்சினை இல்லை
மை எல்லாம் அழியவில்லை. நன்றாகத் தான் இருக்கிறேன்... மை விஷயத்தில் எந்தவொரு புகாரும் இல்லை. மை சரியாகவே இருக்கிறது.. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்படும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். ஆதார் கார்டுகளை எடுத்து வந்தாலும் வாக்களிக்கலாம். தேர்தல் அமைதியாக நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications