ஈரோட்டில் கலெக்டர் ஆபீஸில் "இப்பவே கல்யாணம்".. தரையில் புரண்டு அழுத நபர் யார் தெரியுமா? செம ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு தன்னுடைய அம்மாவுடன் வந்த ஒரு நபர், திடீர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.. இதனால் கலெக்டர் அலுவலகமே சிறிது நேரத்தில் பதற்றமாகி, போலீசாரும் அதிரடியில் குதித்து நிலைமையை சரி செய்தனர்.. மக்கள் குறைதீர் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பையும், பேசுபொருளையும் இந்த சம்பவம் உருவாக்கி விட்டது.. என்ன நடந்தது ஈரோட்டில்?
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது, இன்று திங்கள்கிழமை வழக்கம்போல் படு பிஸியாக இயங்கி கொண்டிருந்தது.. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்காக காலை முதலே கலெக்டர் அலுவலகத்துக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர்.

ஈரோடு கலெக்டர் ஆபீஸ்
தங்களது நிலம், வேலை, உதவித்தொகை, குடும்ப பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்களை தயார் செய்து வரிசையாக உட்கார்ந்திருந்தனர்..
அப்போது, ஈரோடு புதுமைக்காலனி பகுதியை சேர்ந்த அல்லா பக்கல் என்பவரும் வந்திருந்தார்.. இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் நடைபெறவில்லையாம்.. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.. தனக்கு திருமணம் நடைபெறாததால் மன உளைச்சலில் இருந்து வருகிறாராம் அல்லா பக்கல்.
கல்யாணம் செய்து வைங்க
எனவே தனக்கு திருமணம் செய்து வைத்து, திருமணத்திற்கு அரசு தரப்பில் உதவி செய்ய வேண்டும் என்று கோரி மனு அளிக்க இன்று, தன்னுடைய அம்மா நூர்ஜகான்னுடன் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்தார்.. அதிகாரிகள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகே சென்று, தனது கோரிக்கையை அல்லா பக்கல் வலியுறுத்தியுள்ளார்.. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை சற்று நேரம் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்..
ஆனால் அதனை ஏற்க மறுத்த அல்லா பக்கல், "எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும்" என்று அதிகாரிகளிடம் சொல்லி கொண்டேயிருந்தார்.. பிறகு பணி செய்ய விடாமல், அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.. இதனால் அங்கு வந்திருந்த பொதுமக்கள், இந்த சம்பவத்தால் குழப்பமடைந்தனர். சிலர் அமைதியாக நடக்கும் சம்பவத்தை கவனித்து கொண்டிருந்தனர்..
ஐயோ பயமா இருக்கு
அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த முனைந்தனர்.. அம்மா, மகன் இருவரையும் வெளியே அழைத்து செல்ல முயன்றபோது, அல்லா பக்கல் திடீரென கூச்சலிட்டார்.. ஆனாலும் போலீசார் இருவரையும் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தனர். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏற சொன்னார்கள்..
ஆனால், அல்லா பக்கல் ஆட்டோவில் ஏற முடியாது என்று சொல்லி தரையிலேயே உட்கார்ந்து பிடிவாதம் பிடித்தார்.. ஐயோ, எனக்கு பயமா இருக்கு என்று கத்தினார்..
காப்பாத்துங்களேன் காப்பாத்துங்களேன்
அப்போது போலீசார் அவரிடம் "பயப்பட கூடாது, ஆட்டோவில் வீட்டுக்கு போகலாம்" என்று சமாதானம் செய்து ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள்.. ஆனால், அல்லா பக்கல், "எனக்கு பயமா இருக்கு, யாராவது என்னை காப்பாத்துங்களேன்" என்று சத்தம் போட்டார்.. இறுதியில், அவரை நான்கைந்து போலீசார் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்..
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த நெட்டிசன்கள், மனநலப் பாதிப்பு உள்ள அல்லா பக்கலுக்கு உடனடியாக உரிய ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications