பார்வைபடாத 73 பேர்.. ஈரோடு கிழக்கில் கவனம்பெறும் 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்! ஏன் முக்கியம்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள நிலையில் அனைவரின் கவனமும் 4 வேட்பாளர்கள் மீது மாறியுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட 4 வேட்பாளர்கள் தான் கவனம் பெற்றுள்ளனர். இவர்கள் 4 பேரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள் என கூறப்படும் நிலையில் அந்த வேட்பாளர்கள் யார் யார்? இவர்கள் எதற்காக கவனம் பெறுகின்றனர்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு கடந்த 27 ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக இரு அறைகளில் எண்ணப்பட உள்ளது.
ஓட்டு எண்ணிக்கையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக இருந்தனர்.

4 வேட்பாளர்கள் மீது தான் கவனம்
இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா உள்ளிட்டவர்களும் அடங்குவர். இந்நிலையில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவாகி இருந்த நிலையில் அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அதன்பிறகு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 2வது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, 3வது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, 4வது இடத்தில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் இருந்தனர். இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைவரின் கவனமும் 4 வேட்பாளர்களின் மீதும் தான் திரும்பி உள்ளது. மாறாக பிற 73 வேட்பாளர்களை யாரும் கண்டுக்கொள்ளாத நிலை உள்ளது.

காங்கிரஸ் மீதான கவனம் ஏன்?
காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மீது கவனம் பெற முக்கிய காரணம் உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் தற்போது பிரதானமாக பல கட்சிகள் உள்ளன. இருப்பினும் பெரும்பலான கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணியிலும் அதிகமான கட்சிகள் உள்ளன. மேலும் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே இங்கு திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணிகள் தான் வெற்றி பெறும் என கருதப்பட்டது.
மேலும் இந்த தேர்தலை பொறுத்தமட்டில் இது திமுகவின் கடந்த 2 ஆண்டு ஆட்சிக்கான மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் அதன் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர். இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மேலும் அவரது வாக்கு வித்தியாசமும் முக்கியமாக பார்க்கப்படும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றால் அது கடந்த 2 ஆண்டு ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு என திமுகவினரால் கூற முடியும். இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெறும் ஒவ்வொரு வாக்குகளும் திமுகவுக்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஈவிகேஎஸ் இளங்கோவன் தோற்றால் அது காங்கிரஸ் கட்சியை காட்டிலும் திமுகவுக்கு தான் பெரிய அடியாக பார்க்கப்படும். ஆனால் இங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி முகத்தில் உள்ளது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு
இதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் தென்னரசு கவனம் பெறுகிறார். அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே அதிகாரப்போட்டி ஏற்பட்டது. இதில் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவிட்டு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்த பதவியை பெற்ற பிறகு அவர் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதனால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி என்பது கொங்கு மண்டலத்தில் உள்ளது. இது அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் நிலையில் இந்த தேர்தல் வெற்றி என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தென்னரசு பின்தங்கி உள்ளார்.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்
அடுத்ததாக இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் தேமுதிக வெற்றி பெறாமல் தோல்வி முகத்தில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலும் அந்த கட்சிக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது ஈரோடு கிழக்கில் தேமுதிக களமிறங்கி உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. அந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சி களமாடியது. அதன்பிறகு விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து தேமுதிக மெல்ல சரிவை சந்திக்க தொடங்கிய நிலையில் இந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றால் அது அந்த கட்சி தலைவர்களுக்கும், கட்சியினருக்கும் பூஸ்ட்டாக அமையும். ஆனால் இந்த தேர்தலில் தேமுதிக தோல்வி முகத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை விடவும் தேமுதிக பின்தங்கி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா
மேலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவின் மீதான பார்வையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இளம் வயதினரை ஈர்க்கும் கட்சியினராக நாம் தமிழர் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஈரோடு கிழக்கு கருத்து கணிப்பில் இளைஞர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு தான் அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2021 தேர்தலில் இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி 11,629 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்தது. மக்கள் நீதி மய்யத்தையும் அந்த தேர்தலில் பின்னுக்கு தள்ளியது. இந்நிலையில் தான் தற்போது அதிமுக, திமுகவினர் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகா வெற்றியை முன்நிறுத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஒருவேளை வாகை சூடாவிட்டாலும் கூட அவருக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கிடைக்கு வாக்குகள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். ஏனென்றால் பாமக உள்பட அதிமுக, திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என துவங்கப்பட்ட அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் நாம் தமிழர் கட்சி துணிந்து கூட்டணி ஏதுமின்றி களமாடி உள்ள நிலையில் அந்த கட்சி பெறும் வாக்கு கவனிக்கத்தக்க ஒன்றாக அமையும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications