4 வருடத்தில் 4 தேர்தல்..வாக்களிக்க ஆர்வம் காட்டாத ஈரோடு கிழக்கு மக்கள்! சர்ரென சரிந்த வாக்கு சதவீதம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி முகத்தை நோக்கி பயணித்து வருகிறார். இந்த நிலையில் 2021 முதல் தற்போது வரை 3 தேர்தல்களை அந்த தொகுதி சந்தித்து இருக்கிறது. அதில் 2 இடைத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைத்துள்ளனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்ற தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருந்தனர்.
இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும் 37 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இது 2023ஆம் ஆண்டின் வாக்குப்பதிவை விட 7 சதவீதம் குறைவாகும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி முகத்தை நோக்கி பயணித்து வருகிறார். இந்த நிலையில் 2021 முதல் தற்போது வரை மூன்று தேர்தல்களை அந்த தொகுதி சந்தித்து இருக்கிறது. அதில் இரண்டு இடைத்தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல்களில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தத் தேர்தலில் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021இல் இருந்து தற்போது வரை மூன்று முறை சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு முறை மக்களவைத் தேர்தலிலும் அப்பகுதி மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். அதில் இரண்டு இடைத்தேர்தல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தலில் 21 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தாமாக வேட்பாளர் யுவராஜை விட சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 66.56 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2011ஆம் ஆண்டு 77.60 சதவீதமும், 2016-ம் ஆண்டு 69.57 சதவீதமும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதாவது 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் மட்டுமே வாக்களித்து இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 72,887 பேர் வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்களர்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications