ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வீடு வீடாக சென்று தபால் வாக்குகள் சேகரிப்பு- வாக்களித்த 95 வயது மூதாட்டி
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளைச் செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்களை சரிபார்த்து தபால் வாக்குகளைப் பெற்று வருகின்றனர். 95 வயது மூதாட்டி சண்முகவள்ளி உள்ளிட்டோர் நேற்று தபால் வாக்குகளைச் செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 256 பேர் உள்ளனர். இவர்கள் தபால் வாக்குகளைச் செலுத்த விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த பணி வரும் 27-ந் தேதி வரை நடைபெறும்.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினரிடம் தபால் வாக்குகளைப் பதிவு செய்வோரின் விவரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் இந்தக் குழுக்கள் வீடு வீடாக வாக்குப் பெட்டி, தபால் வாக்குக்கான விண்ணப்பம், வேட்பாளர்களின் சின்னங்களுடனான வாக்குச் சீட்டு ஆகியவற்றுடன் சென்றனர். வீடுகளில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சரிபார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மறைப்பு அட்டைகள் அமைக்கப்பட்டு வாக்களிக்க செய்தனர். ஈரோடு ஈஸ்வரன் கோவில் குடோன் வீதியில் 95 வயது மூதாட்டி சண்முகவள்ளி உள்ளிட்டோர் நேற்று வாக்குகளை செலுத்தினர்.
இந்த தபால் வாக்குகளைப் பெறும் பணி இன்றும் நாளையும் நடைபெறும். இதனையடுத்து மீண்டும் திங்கள்கிழமை தபால் வாக்குகள் பெறப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications