ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக செல்லும் ஊழியர்கள்.. பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாக்கினை தபாலில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில், 209 முதியோர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பப் படிவம் வழங்கி இருந்த நிலையில், அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூத் சிலிப் வழங்கும் பணி பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications