லாங் பிளான்! எடப்பாடியின் திட்டமே வேறயாம்.. பிடிஆர் சொன்ன முக்கிய பாயிண்ட்.. அடித்து சொல்லும் புள்ளி
சமீபத்தில் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக பிடிஆர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், வெளிப்படையாக சில விஷயங்களை சொன்னார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு இங்கே ஜெயிக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் எடப்பாடி தரப்பு வாங்க போகும் ஓட்டு கணிசமாக இருக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் களநிலவரம் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒரு எதிர்கால திட்டமாக எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார். இதில் தோல்வி அடைவோம் என்று தெரியும். ஆனால் இதில் வெற்றிகரமான தோல்வியை அடைய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். நன்றாக போட்டியிட்டு தோல்வி அடைந்தால் கூட மக்கள் தன்னை மதிப்பார்கள். அதிமுகவினர் தன்னை மதிப்பார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். அதோடு திமுகவிற்கு எதிராக நாம் நின்றால் அதிமுகவின் சப்போர்ட் நமக்கு கிடைக்கும். மேலும் சின்னம் தன்னிடம்தான் இருக்கிறது என்று எடப்பாடி மக்கள் மனதில் பதிய வைக்க முடியும். இதுதான் எடப்பாடியின் லாங்க் டேர்ம் பிளான் ஆக இருக்கும்.

பிடிஆர்
சமீபத்தில் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக பிடிஆர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், வெளிப்படையாக சில விஷயங்களை சொன்னார். அதில் எதையாவது செய்து மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் நன்றாக சிந்திக்க கூடியவர்கள். மக்களை ஏமாற்ற முடியாது. மக்களை புரிந்து அரசியல் செய்ய வேண்டும். மக்களை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு வடக்கு, தெற்கில் வாக்கு கிடைத்தது. கொங்கில் குறைவாக வாக்கு கிடைத்தது என்று கூறினார். இதன் அர்த்தம் கொங்கில் அதிமுக இன்னும் வலிமையாக இருக்கிறது என்பதுதான். அதனால் தேர்தல் களம் சூடாகவே இருக்கும்.

எடப்பாடி வாக்கு
எடப்பாடி தரப்பு இங்கே ஜெயிக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் எடப்பாடி தரப்பு வாங்க போகும் ஓட்டு கணிசமாக இருக்கும். இந்த தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பக்கம் இல்லை. இதில் கேஎஸ் தென்னரசு வாங்கும் ஓட்டு எல்லாம் எடப்பாடி வாங்கும் ஓட்டு என்ற பெயர் இருக்கும். அதாவது நான் வாங்கிய ஓட்டு என்று எடப்பாடி பிரச்சாரம் செய்ய முடியும். தேர்தலில் அதிமுக வெல்லவில்லை என்றாலும் எடப்பாடிக்கு இது சாதகமாக இருக்கும். ஓபிஎஸ் தோற்றுவிட்டார். கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் தோல்வி அடைந்துவிட்டார். அரசியலில் தூங்கிக் கொண்டு இருக்கும் போதும் கண்ணை திறந்து இருக்க வேண்டும் என்பார்கள்.

ஓபிஎஸ்
அதை ஓபிஎஸ் செய்யாமல் விட்டுவிட்டார். அதனால் அவர் தோல்வி அடைந்துவிட்டார். ஓபிஎஸ் தொண்டர்களை நம்பவில்லை. ஓபிஎஸ் தொண்டர்கள் மதிப்பை பெறாமல் சட்ட ரீதியாக போராட்டம் செய்து வருகிறார். கோர்ட்டிற்கு செல்கிறார். அதில் எல்லாம் அவருக்கு பெரிதாக தீர்வு கிடைக்காது. ஆனால் சட்ட போராட்டம் மூலம் தீர்வு பெறலாம் என்று ஓ பன்னீர்செல்வம் நினைப்பது அவருக்கு பலன் கிடைக்காது, என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications