ஓய்ந்தது பிரச்சாரம்.. நாளை வாக்கு பதிவு! ஈரோடு கிழக்கில் உதிக்குமா உதயசூரியன்? நம்பிக்கை தருமா நாதக?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கின்றனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும் 37 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். மொத்தம் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
வாக்குச்சாவடி மையங்களில் முறைகேடுகளை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் வழக்குப்படை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். நாளை பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஈரோடு அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்படுகிறது. வரும் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
40, 50 கோடி செலவு பண்ணுவாங்க.. கையை கட்டிட்டாரு சீமான்! திரள்நிதி தான் கேக்குறாரு!உருக்கமாக வீடியோ -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி!












Click it and Unblock the Notifications