ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுகவிற்கு வெற்றி கன்பார்ம்.. அப்போ நாம் தமிழர்.. வெளியான எக்சிட் போல்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74-76 சதவிகிதம் வாக்குகளை வென்று திமுக வெற்றி பெறும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் 76,500 முதல் 78,500 வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. மாலை 6 மணி வரை 65.72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் இங்கே 75 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த முறை 10 சதவிகிதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகியதால் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடந்துள்ளது.
அதிமுக புறக்கணிப்பு:
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக காங்கிரசுக்கு பதிலாக இந்த முறை போட்டியிடுகிறது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 74-76 சதவிகிதம் வாக்குகளை வென்று வெற்றிபெறும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் 76,500 முதல் 78,500 வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக ஈரோடு கிழக்கு ஏன் புறக்கணிப்பு:
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக தவிர்த்து பிரபலமான கட்சி என்றால் நாம் தமிழர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி எத்தனை வாக்குகளை பெறும் என்று கணிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications