எடப்பாடி, அண்ணாமலையே "இதை" எதிர்பாக்கவில்லை.. ஸ்டாலின் நடத்திய கேம்.. புட்டு புட்டு சொன்ன புள்ளி!
எடப்பாடி தன்னை கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு இணையான தலைவராக நினைக்கிறார். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளால் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை அதிர்ச்சியில் இருப்பதாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதிமுகவின் இந்த தோல்வியால் எடப்பாடிக்கு பிரஷர் அதிகரிக்கும், இந்த தோல்வியை அவர் எதிர்பார்க்கவில்லை, என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில் திமுகவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு இல்லை. 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்பது அதிகம். இவ்வளவு வித்தியாசம் இருக்காது என்று நினைத்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வித்தியாசம் வந்துள்ளது. அரசுக்கு எதிர்ப்பே இல்லை என்பதை இது காட்டுகிறது. மக்கள் எதிர்ப்பு அரசுக்கு பெரிய அளவில் இல்லை. ஸ்டாலினுக்கு சாதகம் இது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.. கருணாநிதியை விட அதிக வாக்குசதவிகிதம் வாங்க வைத்தார். 2006ல் கருணாநிதியால் தனி மெஜாரிட்டி பெற முடியாத நிலையில் 2021ல் ஸ்டாலின் திமுகவை தனி மெஜாரிட்டி பெற வைத்தார். கருணாநிதியால் 20 எம்பிக்களை தாண்ட முடியாத நிலையில் அதையும் ஸ்டாலின் செய்து காட்டினார்.

தேர்தல் வெற்றி
தேர்தல் வெற்றிகளில் ஸ்டாலின் சிறப்பாக இருக்கிறார். கருணாநிதியை விட ஸ்டாலின் தேர்தல் அரசியலில் பெரிய தலைவராக இருக்கிறார். ஸ்டாலினுக்கு மக்கள் எதிர்ப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. உண்மையை பேசுவோம். சிலர் பேசுகிறார்கள் என்பதற்காக மக்கள் எதிர்க்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. அது தற்போது உறுதியாகி உள்ளது. 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைவோம் என்று அண்ணாமலை நினைத்தார். அதுதான் அவரின் நினைப்பாக இருந்தது. திமுக பெரிய வெற்றிபெறும் என்று அவர் நினைக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியும் இந்த மார்ஜினை எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி தன்னை கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு இணையான தலைவராக நினைக்கிறார். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை. அதைதான் நான் சொல்லி வருகிறேன். அதை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஜாதி ரீதியாக எடப்பாடிக்கு எதிர்ப்பு உள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு இப்படி இருந்தது இல்லை. கவுண்டர்கள் அல்லாதவர்கள் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள்.

15 சதவிகிதம் இருக்கு
எடப்பாடி எதார்த்தத்தை உணராமல் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் 8 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார். ஜெயலலிதா ஒரு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் அடுத்த தேர்தலில் வெல்வார். இவர் அப்படி இல்லை. இவர் மக்கள் வாக்களித்து முதல்வர் ஆகவில்லை. மக்கள் இவரை முதல்வராக ஆதரிக்கவில்லை. அப்படி இருக்கும் போது இதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடிக்கு ஈர்ப்பு சக்தி இல்லை. அவர் மட்டும் இருந்தால், அதிமுக வாக்குகளை மற்றவர்கள் உடைப்பார்கள். அவருக்கு 15 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் உள்ளன என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும், என்று ரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் கூறி உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications