அதிசயமா இருக்கே.. அதிமுக வாக்குகளை அள்ளிய திமுக.. அதையும் மிஸ் செய்த நாம் தமிழர்.. பரிதாபம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இங்கே வாக்கு வித்தியாசத்தை பார்க்கும் போது அதிமுக வாக்குகளை திமுக அள்ளி உள்ளதாகவே தோன்றுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்படி 24,703 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தமாக 30657 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை வகிக்கிறது. 5954 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. 1204 வாக்குகள் இதுவரை நோட்டாவிற்கு விழுந்துள்ளன.

அதிமுக போட்டியிடாத நிலையில் நோட்டாவிற்கு கணிசமான வாக்குகள் சென்றுள்ளன. ஆனால் நாம் தமிழர் கடந்த முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. இந்த முறை அதை விட குறைவான வாக்குகள் அல்லது அதே அளவு வாக்குகள் மட்டுமே பெறும் சூழல் உள்ளது.
அப்படி என்றால்.. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் பல நாம் தமிழருக்கு செல்லாமல் திமுகவிற்கு சென்றுள்ளது.. அல்லது நோட்டாவிற்கு சென்றுள்ளது. மீதம் உள்ள அதிமுக வாக்காளர்கள் தேர்தலையே தவிர்த்து உள்ளனர்.
பெரியார் வழி வந்த கட்சிதான் அதிமுகவும் என்பதால்.. அதிமுகவினர் பெரியாரை பற்றி தவறாக பேசிய சீமானை புறக்கணித்து உள்ளனரோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் நடந்தது. அங்கே 65.72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் இங்கே 75 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த முறை 10 சதவிகிதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகியதால் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை. காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடந்துள்ளது.
அதிமுக புறக்கணிப்பு:
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக ஈரோடு கிழக்கு ஏன் புறக்கணிப்பு:
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக தவிர்த்து பிரபலமான கட்சி என்றால் நாம் தமிழர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் அந்த கட்சியாலும் அதிமுக வாக்குகளை பெரிதாக வாங்க முடியவில்லை.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications