ஆயிரம் பிறை கண்ட தம்பதி! 100 வயதை கடந்த தந்தை-தாய்க்கு ’திருமணம்’ செய்து வைத்த குடும்பம்! சூப்பர்ல.!
ஈரோடு: ஈரோடு அருகே 5 தலைமுறை உறவினர்களோடு வாழ்ந்து வரும் 100 வயதை கடந்த தாத்தா பாட்டிக்கு, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து யாகம் நடத்தி மங்கள இசை முழங்க 100வது திருமண நாள் விழாவை கனகாபிஷேமாக நடத்தி வைத்துள்ளனர் குடும்பத்தினர். இந்த நிகழ்ச்சியில் மகிழ்சியுடன் பங்கேற்று உறவினர்கள் சிறப்பித்ததோடு, 'மணமக்களிடம்’ ஆசி பெற்று சென்றனர்.
இந்த உலகத்தில் எத்தனை யுகங்கள் ஆனாலும் மாறாத ஒன்று என்று இருந்தால் அது காதல் தான்.. அமர காதல் தொடங்கி அலைபாயுதே காதல் வரை பல்வேறு காதல்களை தமிழ் சினிமாவும் செதுக்கி எடுத்து விட்டது.

பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல், படிக்கும் போது காதல், திருமணத்திற்கு பிறகு காதல் , திருமணம் கடந்த காதல் என பல்வேறு காதலை பார்த்திருப்போம். காதலிக்காமல் திருமணம் செய்து கொண்டு அதன் பின் காதலிப்பதும் வழக்கம் தான்.
தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ஓரிரு ஆண்டுகளில் பிரிந்து, திருமண முறிவு வேண்டி நீதிமன்றங்களையும் நாடி வருகின்றனர். அதனையும் தாண்டி ஆண்டுக்கணக்கில் எவ்வித பிணக்குமின்றி வாழும் ஜோடிகளும் ஆயிரக்கணக்கில் உண்டு. அப்படி ஒரு ஜோடிதான், ஈரோடு அருகே 46புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிரைப்பாளி பகுதியை சேர்ந்த பெருமாள் வீரம்மாள் தம்பதியினர்.
இவர்களுக்கு 4 பெண்கள், 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் 100 வயதை கடந்த வயதான தாத்தா பாட்டி இருவருக்கும் கனக அபிஷேக விழா முன்னெடுக்க மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், எள்ளு கொள்ளு பேரன்கள் என அனைவரும் கடந்த சில நாட்களாக திட்டமிட்டு ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் யாகம் செய்து 100வது திருமணத்தை கோலாகலமாக நடத்தினர். இதன் பின்னர் திருமணம் முடிந்த வயதான தம்பதியினரிடம் குடும்பத்தினர் உட்பட ஊர் மக்கள் என அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர்.
கணவன் மனைவியாக வாழக்ககூடியவர்கள் ஆயிரம் பெளர்ணமியை பார்த்தால் தான் கனக அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையேயான உறவுகள் பல்வேறு சிறு கருத்து மோதல் காரணமாகவே பிரிவு ஏற்படும் நிலையில் இத்தனை வருடங்கள் திருமண வாழ்க்கை வாழ்ந்து வரும் வயதான தம்பதியினர் மீது மற்றவர்களை பொறாமைபடும் அளவில் உள்ளது.
இது குறித்து மகன்கள் கூறும்போது எங்களை விவசாய வேலை என சிறு வேலைகளை செய்து வளர்த்து வந்த தாய் தந்தைக்கு திருமணம் செய்து பார்ப்பது என்பது அளவற்ற மகிழ்ச்சியாக இருப்பதுடன் இருவரும் தற்போது வரை உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தற்போது சைக்கிளில் செல்வதும் சிறு வேலைக்கு செல்வதும் வாடிக்கையாக தந்தை பெருமாள் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

மகள்கள் கூறும்போது தாங்கள் பேத்தி எடுத்தும் கூட தங்களது தாய் தந்தைக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சியாகவும் இன்னும் தங்களை சார்ந்து இருக்காமல் அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இதுபோன்ற திருமணத்தை தங்களது குடும்பத்தில் உள்ள வயதான தம்பதியினருக்கு நிகழ்த்தி அவர்களை மகிழ்ச்சியடை வேண்டும் என்கிறனர். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரவர குடும்ப உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில் இந்த வயதான தம்பதியினர் 100வது கனக அபிஷேகம் காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுவாக 60 வயதை பூர்த்தி செய்த தம்பதியினருக்கு ஷஷ்டியப் பூர்த்தியும், 70 வயதை கடந்தவர்களுக்கு பீம ரத சாந்தியும், 80 வயது கடந்தவர்களுக்கு சதாபிஷேகமும், 96 வயதை கடந்தவர்களுக்கு கனகாபிஷேகமும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த விழாக்களை கொண்டாடுவது அவ்வளவு எளிது கிடையாது. திருமணத்தின் போது முதல் திருமாங்கல்யமும், சஷ்டியை பூர்த்தியின் போது இரண்டாவது மாங்கல்யமும், பீமராத சாந்தியும் போது மூன்றாவது முறையும், சதாபிஷேகத்தின் போது நான்காவது முறையாகவும், கனகாபிஷேகத்தின் போது ஐந்தாவது முறையாகவும் கணவன் மனைவிக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார். இதுவும் எல்லோருக்கு வாய்ப்பது கிடையாது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications