Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு "ஹீரோ" யார்னு தெரியுதா? அந்த பாட்டிலை டேபிள் மேல உருட்டி.. குஷியில் துள்ளிய மாணவர்கள்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு அரசு பள்ளிக்கு திடீரென வருகை தந்துவிட்டார் அந்த விஐபி.. அவரை பார்த்ததுமே, பள்ளி மாணவ - மாணவிகள் குதூகலமாகிவிட்டார்கள்.. என்ன நடந்தது? யார் வந்தது ஸ்கூலுக்கு?

தமிழகத்தின் அரசு பள்ளிகளில், அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.. இப்படித்தான், ஒருமுறை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி என ஒரே நாளில் ஈரோட்டிலுள்ள மொத்த பள்ளிகளுக்கும் திடீர் ஆய்வு செய்தார்.

Erode Government School and District Collector sudden review, and teaching to the 10th std students

நேரடி ஆய்வுகள்: அந்த பள்ளிகளின் வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா? என்று ஒவ்வொரு பகுதியாக சென்று நேரடியாகவே ஆய்வுகளில் மேற்கொண்டார்.. பிறகு முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் பேசும்போது, ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதெல்லாம் அமைச்சர்களின் வழக்கமான ஆய்வுகள் என்றாலும், அன்பில் மகேஷ் ஆய்வுக்கு வரப்போவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம்.. அமைச்சர் வரப்போகிறார் என்று முன்கூட்டியே யாருக்கும் தகவல் தரப்படவில்லை.

பதட்டம்: அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பதறிப்போய்விட்டார்கள். அதுமட்டுமல்ல, பள்ளி மாணவர்களிடம், அவர்களது பாடங்களில் இருந்து கேள்விகளை அமைச்சர் கேட்க துவங்கிவிட்டதால், மாணவர்களும் பதட்டமாகிவிட்டார்கள்..

Erode Government School and District Collector sudden review, and teaching to the 10th std students

அந்தவகையில், ஈரோடு அரசு பள்ளிகளில் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, வழக்கமாக வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட செல்வார்.. அவர் எந்த பகுதிகளில் பார்வையிட செல்கிறாரோ, அந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் ஏதாவது இருந்தால், உடனே அந்த பள்ளிக்குள் நுழைந்துவிடுவார். பள்ளியிலுள்ள மாணவ-மாணவகளை சந்தித்து கலந்துரையாடுவது கலெக்டரின் வழக்கம்...

கழிவறை: அப்படித்தான், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பெருந்துறை பெரியவீரசங்கிலி ஊராட்சிக்கு சென்றார்.. ஆய்வு முடித்துக் கொண்டு திரும்பும்போது, கைக்கோளபாளையத்தில் உள்ள பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டார்.. பிறகு, மாணவ-மாணவிகளை பார்த்ததுமே கலெக்டர் உற்சாகம் ஆகிவிட்டார். வழக்கம்போல அவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் திடீரென 10-ம் கிளாஸ் ரூமுக்கு நுழைந்தார்.. அந்த கிளாஸில் பிள்ளைகள் எல்லாரும் அப்போது படித்துக் கொண்டிருந்தனர்.. திடீரென கலெக்டர் கிளாஸ்ரூமுக்குள் வந்ததை பார்த்ததுமே பதைபதைத்து போய்விட்டார்கள்..

அறிவியல் பாடம்: படித்துக்கொண்டிருந்த மாணவ - மாணவிகளிடம் சென்ற கலெக்டர், அவர்களிடம் ஒரு புத்தகத்தை வாங்கி பார்த்தார்.. அனைவரும் அறிவியல் பாடம் படித்து கொண்டிருந்ததை அறிந்தார். உடனே அவர்கள் படித்துக்கொண்டு இருந்த அறிவியல் பாடம் தொடர்பான கேள்விகளை கேட்க துவங்கிவிட்டார். மாணவ-மாணவிகளும் கலெக்டரின் எல்லா கேள்விகளுக்கும் டக் டக்கென உற்சாகமாக பதில் சொன்னார்கள்..

மாணவர்களை கேள்வி கேட்டு முடித்ததுமே, செய்முறை விளக்க பாடத்துக்குள் நுழைந்தார் கலெக்டர்.. நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளையும் கேட்டார்.. நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார்... சிறிது நேரம் நியூட்டனின் 3ம்விதி குறித்து பாடம் நடத்தினார்..

விளக்கம்: "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு" என்ற நியூட்டனின் 3வது விதியை மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடத்த முயன்றார்.. இதற்காக ஒரு பாட்டிலை எடுத்து, அதை டேபிள் மீது வைத்து உருட்டி, செய்முறை விளக்கம் தந்தார்.. இப்படிஒரு செயல்முறை விளக்கத்தை பார்த்ததுமே, மாணவ - மாணவர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. அதற்கு பிறகு சிறிது நேரம் மாணவ - மாணவர்களிடம் உரையாடிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றார் ராஜகோபால் சுன்கரா..

கொஞ்ச நேரத்தில், கலெக்டரே ஆசிரியராக மாறிவிட்ட தருணமானது, மாணவ-மாணவிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+