ஈரோடு எம்பி கணேச மூர்த்தி திடீர் தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ஷாக் காரணம்
ஈரோடு: ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் திடீரென்று ஈரோடு எம்பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைகோவின் மதிமுகவை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவருக்கு வயது 77. ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு லோக்சபா தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கணேச மூர்த்தி மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5வது ஆண்டாக அவர் எம்பியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலையில் கணேச மூர்த்தி திடீரென்று ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரித்தபோது கணேச மூர்த்தி எம்பி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கணேச மூர்த்தி தற்போது ஈரோடு எம்பியாக உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை ஈரோடு தொகுதி மீண்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதிக்கு பதில் திருச்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணேச மூர்த்திக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு ஈரோட்டில் திமுக வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்டார்.
இதனால் கணேச மூர்த்தி மனம் நொந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதிமுக தலைமையும் அவருக்கு சரியான மரியாதை அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலையில் வீட்டில் Sulphas-யை தண்ணீருடன் சேர்த்து அவர் உட்கொண்டு மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு மதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications