கொத்தமல்லி தழையை கொண்டு சென்ற விவசாயி.. திடீர்னு தாளவாடி சாலையை கடந்து போன உருவம்.. ஸ்டன் ஆன ஈரோடு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடியில் புலி நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. இதனிடையே, சாலையில் புலி நடமாடும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். எனினும், இரவு நேரங்களில் இந்த பாதைகளில் புலி, சிறுத்தைகள் நடமாடுவதும் வழக்கமாகும். இதனால் அங்குள்ள மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதம்கூட, 65 வயது முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.. புலிகள் காப்பகத்தில் உள்ள பசுவேஸ்வரர் கோயில் அருகே விறகு சேகரிக்கச் சென்றபோது, முதியவரை காட்டு யானை தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்தது..
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், தாளவாடியில் புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.. ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம் அருள்வாடி அருகே உள்ள கர்நாடகா மாநிலம் அரக்கலவாடி கிராமத்தில், விவசாயி ஒருவர் மல்லித் தழைகளை கொண்டு சென்று கொண்டிருந்தார். வியாபாரத்துக்காக இன்று காலை மல்லித்தழைகளை கொண்டு சென்றார்... அப்போது புலி ஒன்று சாலையில் உலா வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விவசாயி உடனே தன்னுடைய செல்போனை எடுத்து, சாலையை கடக்கும் புலியை போட்டோ எடுத்து, அதை சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளார்.. ஈரோடு சுற்றுவட்டார பகுதி மக்கள், புலி நடமாட்டத்தை பார்த்ததுமே பீதியில் உறைந்துள்ளனர்.. வனத்துறையினரும் புலியை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications