ஈரோட்டில் தாலி கட்டிய மறுநாளே தேனி மாப்ளையை காணோம்.. காஸ்ட்லி ஐபோனும் காணோம்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணிடம் பணம் மற்றும் ஐபோன் வாங்கிய நபர், ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாக ஈரோடு எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் மாதேஸ்வரன் நகரை சேர்ந்த அருணாச்சலத்தின் மகள் நந்தினி (28). இவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

Erode marriage fraud

ஈரோடு நந்தினி

திருமணமாகி விவாகரத்து பெற்ற நான், ஒரு மகனுடன் ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் வழியாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த கோகுல் என்பவர் எனக்கு அறிமுகமானார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அவர், எனது பெற்றோரிடமும் பேசியுள்ளார். எங்கள் வீட்டுக்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவசர தேவைக்காக ரூ.3 லட்சம் கேட்டார். இதனால் வங்கியில் தனிநபர் கடனாக ரூ.2.54 லட்சம் பெற்று, மூன்று தவணைகளாக அவரிடம் கொடுத்தேன். மேலும், வங்கிக் கணக்கு மூலம் தவணை முறையில் ஐபோனும் வாங்கிக் கொடுத்தேன்.

வங்கியில் தனிநபர் கடன்

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தார். பின்னர் என்னை வீட்டில் விட்டுவிட்டு, ஊரில் ஒரு பிரச்சனை இருப்பதாகக் கூறிச் சென்றவர் மீண்டும் வரவில்லை. கோகுல் குறித்து விசாரித்தபோதுதான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது தெரியவந்தது. என்னைப் போலவே கணவரால் கைவிடப்பட்ட பெண்களிடம் பேசி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு பெண்ணிடம் இதேபோல் பணம் பறித்துள்ளார். திருப்பூர் போலீசில் அந்த பெண் அளித்த புகாரின்பேரில், கோகுல் மற்றும் அவரது உறவினர்கள் வந்து பணத்தை கொடுத்து புகாரை வாபஸ் பெறச் செய்துள்ளனர்.

ஐபோனுக்கான மாத தவணை

ஐபோனுக்கான மாத தவணையை கேட்டபோது, கடந்த அக்டோபர் 18-ம் தேதி ரூ.1.50 லட்சம் கொடுத்தார். இதற்கு மேல் பணம் தர முடியாது என்று கூறி மிரட்டலும் விடுத்தனர்.

இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து நான் பதிவு செய்தபோது, கோகுல், அவரது அக்கா, மாமா மற்றும் உறவினர்கள் வெவ்வேறு எண்களில் தொடர்பு கொண்டு மிரட்டினர். இதுதொடர்பாக பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன்.

இருதரப்பினரையும் விசாரிப்பதற்காக கடந்த அக்டோபர் 24-ம் தேதி வரவழைத்திருந்தனர். இன்ஸ்பெக்டர் இல்லாததால், நவம்பர் 16-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். ஆனால், இருதரப்பினரையும் விசாரிக்காமலேயே எனது சி.எஸ்.ஆர். மனுவுக்கு தீர்வு காணப்பட்டதாக மொபைல் எண்ணுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, எனது புகார் மீது உரிய விசாரணை நடத்தி, எனக்கு வழங்க வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும்" இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+