ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர ஆசைப்படுகிறேன்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருக்கம்!

மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புவதாக இளங்கோவன் உருக்கம்

Google Oneindia Tamil News

ஈரோடு: தனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புவதாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருக்கம் தெரிவித்துள்ளார்.

தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருவதாகவும் அதைப்பற்றி தாம் பொருட்படுத்தவில்லை எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

பெரியார், ஈவிகே சம்பத், திருமகன் ஈவெரா என தனது தாத்தா, அப்பா, மகன் என மூன்று பேரும் ஈரோட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் களம் காண்கிறார்.

இஸ்லாமிய இயக்கங்கள்

இஸ்லாமிய இயக்கங்கள்

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. என இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தமிமுன் அன்சாரியும் இன்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதனிடையே தாம் போட்டியிடுவது பற்றி உருக்கமுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புவதாக அதன் காரணமாகவே ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதாகவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

பெரியார் பேரன்

பெரியார் பேரன்

தனது தாத்தா பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும் , தனது அப்பா சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தனது மகன் திருமகன் ஈவெரா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஈரோட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பணிகளை செய்திருப்பதாக தெரிவித்தார். இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிச்சயம் தாம் தொடர்வேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வெட்டி ஒட்டி

வெட்டி ஒட்டி

இதனிடையே பல்வேறு அரசியல் சூழல்களில் தாம் பேசிய தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருவதாகவும் அதைப்பற்றி தாம் பொருட்படுத்தவில்லை எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

English summary
Erode East Constituency Congress candidate EVKS Elangovan said that he wants to continue the work left by his son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X