அதிமுகவில் சேருவது குறித்துத் தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. தோப்பு வெங்கடாசலம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: வேறு கட்சியில் சேருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும், நான் தற்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெருந்துறை காங்கேயம் மாநில நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைக்காக சாலைகள் அகல்படுத்தும் பணிகள் நடைபெற்று தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக சாலை பணிகளை துவங்க வலியுறுத்திபெருந்துறை பொது மக்கள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்தார்.

Ex-Minister Thoppu Venkatachalam Denies Party Switch Talks Says No Plans to Join Any Party

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசுகையில், "அதிமுகவில் சேருவது குறித்துத் தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஊடகங்களில் பரவி வரும் இதுபோன்ற செய்திகள் தவறானவை, அரசியல் லாபத்திற்காகப் பரப்புபவர்களைத் தவிர்த்துத் தன் முடிவை வெளிப்படையாகத் தெரிவிப்பேன் என்றார்.

தமக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய கல்லூரிகளோ, தொழிற்சாலைகளோ இல்லை என்பதால், தொழிலைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக வேறு கட்சிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். புதிய அரசின் செயல்பாடுகளை மதிப்பிட குறைந்தபட்சம் 6 மாத காலம் தேவைப்படும் என்பதால், 3 மாத ஆட்சி காலத்தில் குறை கூற முடியாது எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஒரு வாரம் முன்பு திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட விலகியது ஏன் என்று தோப்பு வெங்கடாசலம் விளக்கம்அளித்தார். பெருந்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடந்த வாரம் அவர் பேட்டியளிக்கையில், "திமுக தலைவர் ஸ்டாலின், என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவித்ததற்கு நன்றி.

ஆனால் நான் ஈரோடு மாவட்டச் செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இனிமேலும் என்னால் திமுகவில் பயணிக்க முடியாத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இதுவரை என்னிடம் இல்லை. எனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிப்பேன்" இவ்வாறு கூறியிருந்தார். முன்னதாக திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து தோப்பு வெங்கடாச்சலம், இந்த மாத தொடக்கதில் தான் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+