ஷாக்.. ஈரோடு அருகே இளைஞர் மீது ஆசீட் வீசிய இளம்பெண்.. ஆபத்து நிலையில் சிகிச்சை.. என்னாச்சு?
ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசீட் வீசிவிட்டு ஓடினார். இதில் ஆபத்தான நிலையில் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 26 வயது நிரம்பிய இளைஞர் மீது ஒருவர் ஆசீட் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் அந்த இளைஞரின் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்னளர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று பெருந்துறையில் இருந்து வந்து கொண்டிருந்த கார்த்திக் மீது இளம்பெண் ஒருவர் ஆசீட் வீசிவிட்டு ஓடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. காதல் பிரச்சனையில் தான் இந்த ஆசீட் வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் தற்போது கார்த்திக் சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசீட் வீசிய பெண் யார்? இருவருக்கும் இடையே எந்த மாதிரியான பிரச்சனை ஏற்பட்டது? என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இதுபற்றி போலீசார் தற்போது விசாரிக்க தொடங்கி உள்ளனர். மேலும் பட்டபகலில் இளம்பெண் ஒருவர் இளைஞர் மீது ஆசீட் வீசிய சம்பவம் ஈரோட்டில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications