விஜய்க்கு குரு திசை.. இனி எண்டே இல்லை.. செங்கோட்டையன் பளீச்
ஈரோடு: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. தவெகவின் 100 நாள் ஆட்சியை சாதனையாக அக்கட்சியினர் கொண்டாடி பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிக்கு சனி திசை நடப்பதாகவும், முதலமைச்சர் விஜய்க்கு குரு திசை நடப்பதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "நம் தலைவர் திரைப்படத்தில் இருந்து வந்தார் என்று விமர்சிக்கிறார்கள். நம் தலைவர் திரைத்துறையிலும் உச்சத்தை தொட்டார். இப்போது நம் மக்களுக்கு தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இந்த முதல் 100 நாட்கள் இல்லை.. எத்தனை நாட்களானாலும் மக்கள் நம் திட்டத்தை நேசிப்பார்கள். இவர் பல்லாண்டு வாழ வேண்டுமென மக்கள் வாழ்த்துகிறார்கள்.

குரு திசைக்கு எண்டே இல்லை
எதிர்க்கட்சியில் இருப்போரின் நிலைமை தான் கஷ்டம். அவர்களால் சட்டமன்றத்தில் உட்காரவே முடியவில்லை. சட்டமன்றத்தில் இருவரும் முதலமைச்சராகலாம் என்று நினைத்தார்கள். இருவரும் சேர்ந்து ஆளுக்கு சில காலம் ஆட்சயில் இருக்கலாம் என்று பார்த்தனர். நம்முடைய தலைவரி ராசியே வேறு. அது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு சனி ராசி நடக்கிறது. நம் தலைவருக்கு குரு ராசி நடக்கிறது.
சனி எங்கே கொண்டு போய்விடும்.. நமக்கு எதிராக தான் எல்லா விஷயங்களையும் நடத்தும். குரு நம்மை மேலே மேலே கொண்டு சென்று கொண்டே இருக்கும். குரு திசை இருப்போரை யாராலும் தமிழகத்தில் வீழ்த்த முடியாது. இதுதான் தமிழகத்தின் வரலாறு. 50 ஆண்டுகாலம் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகவை எதிர்க்கட்சி வரிசையில் அருகருகே
அமரவைத்துள்ளார் நம் தளபதி. அவர்கள் எதற்கெடுத்தாலும் ஸ்பீக்கர் சார்.. ஸ்பீக்கர் சார் என கெஞ்சுகின்றனர்.
கோட்ட போட்ட முதலமைச்சர்
இந்த நிலைக்கு கொண்டு சென்றுவிட்டோம். நெஞ்சை நிமர்த்தி பேசிய காலம் மாறி, ஸ்பீக்கரிடம் டைம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் வரலாறு. எல்லாரும் கபடி போட்டி நடத்தலாம். ஆனால் அதில் வெற்றி பெறுவது நம் கழகத்தின் வெற்றி தலைவர் மட்டுமே. அவர் முன்னேறி சென்று கொண்டே இருக்கிறார். அவர் செல்லும் வேகத்தில் யாராலும் செல்ல முடியாது. நாங்களே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நான் 45 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் இருக்கிறேன். தமிழகத்தின் சரித்தரத்தில் கோட் போட்ட முதலமைச்சர் இவர் மட்டும் தான். கோட்டுடன் கம்பீரமாக அவர் வருவதை பார்த்தால், நமக்கே அவரை தொடர்ந்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது. மக்களும் அவரை பார்க்க வேண்டுமென கேட்கிறார்கள். எல்லாரையும் அவர் வந்து சந்திப்பார். மக்களிடம் குறைகளை கேட்டு மக்களை வாழ வைப்பதற்கு தான் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளேன் என கூறியுள்ளார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது"


Click it and Unblock the Notifications
