எஸ்எம்எஸ் வந்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லையா.. உங்களுக்கு நல்ல செய்தி
ஈரோடு: எஸ்எம்எஸ் வந்தும் இதுவரை உரிமைத் தொகைத் கிடைக்காதவர்களுக்கு, வரும் 23-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்படும் என ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேருக்கு மட்டுமே 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அதேநேரம் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்காக தமிழக அரசு உதவி எண் அறிவித்திருந்தது. இணைதளமும் அறிவித்திருந்தது. ஆனால் இரண்டுமே செயல்படவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்து வருகிறார்கள்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாலுகா அலுவலங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமிற்கு வந்தனர். ஆனால் அங்குமே சர்வர் முடங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
இதனால் தமிழகத்தில் நாகர்கோவில் சேலம், ஈரோடு, சென்னை உள்பட பல இடங்களில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஈரோட்டில் பெண்கள் பேசும் போது, ஏழை, எளிய பெண்களின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டீர்கள்.வசதி படைத்த பெண்களின் கணக்குகளில் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது குற்றம்சாட்டினார்.
மேலும் மேல்முறையீடு செய்யலாம் என்று வந்தால் தங்களை அலைகழிக்கலாமா என்று கொந்தளித்தனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். சென்னையிலும் ஒருவர் கை குழந்தையுடன் வந்து, தனது வேதனையை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின.
https://twitter.com/i/status/1704127870912864613நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறாதவர்கள் ஏராளமான பெண்கள் அலுவலகத்தில் குவிந்தனர். மூன்று வீடு நான்கு வீடு வாடகைக்கு விடும் வசதி படைத்தவர்களுக்கு மகளிர் உதவி தொகை கிடைத்துள்ளதாகவும் வாடகை வீட்டில் உள்ள தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, ஈரோடு மாவட்டத்தில் 5.38 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், 2.16 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டிருந்தது.கிடைக்காத மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி முற்றுகையிட்டனர். அவர்களை வட்டாட்சியர் ஜெயகுமார் சமாதானம் செய்தார்.
அப்போது பேசிய அவர், உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்படுகிறது. அவர்களிடம் உங்களுக்கான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். எஸ்எம்எஸ் வந்தும், இதுவரை உரிமைத் தொகைத் கிடைக்காதவர்களுக்கு, வரும் 23-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications