மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
ஈரோடு: மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி தபால் வாக்கு அளிக்க முடியும் என்பது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் தகுதியான அனைவரும் முறையாக வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களும் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) வருகிற 24-ந் தேதிக்குள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று படிவம் '12 டி' வழங்க உள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் ஓட்டுபோட வசதியாக முன்கூட்டியே செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். செல்போன் எண் குறிப்பிடாதவர்களுக்கு தபால் மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு நேரில் வந்து அடையாளத்தை சரிபார்ப்பார்கள். வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை பெற்ற பின்னர் ஓட்டு போடும் முறை குறித்து எடுத்துக்கூறி, வாக்குச்சீட்டு கொடுத்து ஓட்டுப்போடவைப்பார்கள். கண்பார்வையற்றவர், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள், மாற்று நபர் மூலம் வாக்களிக்க வைக்கப்படுவார்கள். அவரிடம் ரகசிய காப்பு உறுதி மொழி பெறப்படும்.
முதல் முறை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும்போது வாக்காளர் இல்லை என்றால், மீண்டும் ஒருமுறை நேரில் வந்து ஓட்டு போட வாய்ப்பு அளிப்பார்கள். அப்போதும் இல்லை என்றால் தபால் ஓட்டுபோட வாய்ப்பு அளிக்கப்படாது. மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகல் அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் சுகாதார அதிகாரியின் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் தேவைப்படுபவர்கள் 0424 226766 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறி உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications