ஹோட்டலில் சாப்பிட்டால் பணம் தர மாட்டார்கள்.. திமுக-வுக்கா உங்கள் ஓட்டு?.. அமைச்சர் தங்கமணி பேச்சு
ஈரோடு: ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவினருக்கு, வாக்களித்தால் உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்குமா? என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பாளையம், சின்னா கவுண்டனூர், அலமேடு, தாஜ் நகர் உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், நாட்டினுடைய பிரதமராக மரியாதைக்குரிய நரேந்திர மோடி மீண்டும் வரவேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும், பாதுகாப்பான தலைவர் வேண்டும் அதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க.வினர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து கொண்டு இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வாக்களித்தால் உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் என்றார்.
முன்னதாக, மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அதற்கான ஆதாரம் இருந்தால் தன்னிடம் தரலாம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அதே நேரம், திமுக வெற்றி பெற்றுவிட்டால் பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை துன்புறுத்துவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா?












Click it and Unblock the Notifications