மாமியார் வீட்டுக்குச் சென்ற இன்ஸ்டா பிரபலம்.. ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கொடூரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுல் என்பவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராகுல் (27). இவர் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்பவருடைய மகளான தேவிகாஸ்ரீ என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணமாகியுள்ளது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது, கவுந்தப்பாடிக்குச் செல்லும் நுழைவுப் பாலத்தில் ராகுல் அதிவேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது. கட்டுப்பாடை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் நடுவில் உள்ள சென்டர்மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ராகுலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராகுலின் சடலத்தைக் கைப்பற்றி, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுலை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். சமீபத்தில் இவர் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவை இமிட்டேட் செய்து பதிவிட்ட வீடியோ கடந்த ஒரு மாதகாலத்தில் 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
இன்ஸ்டா பிரபலம் அதிவேகமாக பைக்கில் சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமில்லாமல் இணையவாசிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications