தபால் துறை அறிவித்த சர்வதேச கடிதம் எழுதும் போட்டி.. அறிய வேண்டியவை.. பரிசுகள் இவ்வளவா?
ஈரோடு: தபால் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளதாகவும், இந்த போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கடிதம் எழுதுவது என்பது இப்போது அடியோடு குறைந்துவிட்டது. கடிதம் தான் மெயிலாக மாறியது. பின்னர் அது வாட்ஸ் அப் பதிவாக மாறி வருகிறது. ஒரு கடிதம் எப்படி இருக்க வேண்டும் . அதன் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்க வேண்டும், சொல்ல வரும் விஷயம் எப்படி கோர்வையாக வர வேண்டும்,சொல்ல வந்த தகவலை தெளிவாக குறிப்பிடுவது எப்படி என கடிதம் எழுதுவதே மிக அழகான பயிற்சியாகும். ஒருவருக்கு நன்றாக கடிதம் எழுதத் தெரியும் என்றால், பல பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும். பிரச்சனைகளை கையாள்வதற்கான பக்குவமும் கிடைக்கும் என்பதால் கடிதம் எழுதுவதை கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும்.

இந்த சூழலில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளதாக தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது. ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தபால் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளது. 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 150 வயதில் உலகளாவிய தபால் தொழிற்சங்கம், 8 தலைமுறைக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் மரபுரிமையாக இருக்கும் என்று நீங்கள் நம்பும் உலகத்தை பற்றி விளக்கி ஒரு கடிதம் எழுத வேண்டும். கடிதம், 800 வார்த்தைக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.
சர்க்கிள் அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு, ரூ.25 ஆயிரம், 2ம் இடத்துக்கு, ரூ.10 ஆயிரமும், 3ம் இடத்துக்கு, ரூ.5,000 ரூபாய், சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளவிலான போட்டியில் முதல் 3 பரிசு பெறுவோருக்கு முறையே, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கடிதங்கள் சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.
கடிதப் போட்டி பள்ளி அளவில் வரும், ஜனவரி 31க்குள் நடத்தி, அதில் சிறந்த கடிதங்களை விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், தபால் கண்காணிப்பாளர் (எஸ்பிஓ), - ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001 என்ற முகவரிக்கு பிப்வரி 5க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். போட்டி நடக்கும் இடம், தேதி துறை சார்பில் பின்னர் அறிவிக்கப்படும். விவரங்களுக்கு இந்திய தபால் துறையின் www.indiapost.gov.in தளத்திலோ அல்லது ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தினை 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications