கருணாநிதியை கோபப்படுத்திய ஆண்டமுத்து.. “யாரா இருந்தாலும் கட்சியை விட்டு தூக்குவேன்!” என்ன நடந்தது?
ஈரோடு: திமுக முன்னாள் எம்எல்ஏ ஆண்டமுத்து இன்று காலமானார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆண்டமுத்து. அவர் 1997ஆம் ஆண்டு செய்த ஒரு செயலால் அப்போதைய முதல்வர் கருணாநிதியே கோபப்பட்டு கண்டித்த சம்பவம் நடந்தது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டமுத்து வயது முதிர்வால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஆண்டமுத்து திமுக சார்பாக 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.

கடந்த 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக நீடிக்க வேண்டும் என வேண்டி சேலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் அப்போதைய திமுக அமைச்சர் அந்தியூர் பி.செல்வராஜ், திமுக எம்.எல்.ஏக்கள் வி.ஏ ஆண்டமுத்து, எஸ்.கே.ராஜேந்திரன் அகியோர் பூக்குழி இறங்கினர்.
பகுத்தறிவுக் கொள்கையைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அமைச்சர், எம்.எல்.ஏக்கள், அம்மனுக்கு பூக்குழி இறங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
தனது அமைச்சரவை சகா மற்றும் எம்.எல்.ஏக்களின் செயலால் கோபப்பட்ட கருணாநிதி, "எனது அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நான் கவலைப்படவில்லை. இது எவ்வளவு காலம் பகுத்தறிவின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என்று நான் கவலைப்படுகிறேன்" எனக் கூறி, "இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயலைப் பின்பற்றும் எந்தவொரு நபரையும் கட்சியிலிருந்து விலக்குவேன்" என்று கடுமையாக கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செல்வராஜ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் ஆண்டமுத்து, எஸ்.கே.ராஜேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கோரினர். அதேசமயம், இந்துக்களின் நம்பிக்கையான வழிபாடான பூக்குழி இறங்கிய கட்சியினரைக் கண்டித்த அன்றைய முதல்வர் கருணாநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் பெரும்பான்மை இந்துக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியதை உணர்ந்த கருணாநிதி, தனது கட்சிக்காரர்களின் தீக்குளிப்பு செயலை மட்டும் தான் காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்ததாகத் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications