ஈரோடு ஆசிரியை வீட்டில்.. வேலைக்கு சேர்ந்த 3வது நாளிலேயே லைப் செட்டில் ஆன ஜாஸ்மினுக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ்பாஷா. இவருடைய மனைவி பல்கீஸ்பேகம். இவர் ஈரோட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.. இவர்களது வீட்டில் ஜாஸ்மின் என்பவர் கடந்த ஒன்றாம் தேதி தான் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த நாளிலேயே வீட்டில் இருந்த நகைகள் எல்லாமே மாயமானது... 35 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் ஜாஸ்மின் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

வீட்டு வேலைக்கு யாரை சேர்த்தாலும், அவர்கள் யார்.. எந்த ஊர், அவர்களின் குடும்ப பின்னணி, அவர்கள் சொந்த ஊர் என்ன.. என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிந்து சேர்ப்பது நல்லது என்கிறார்கள் பலர். ஏனெனில் யார் என்னவென்று தெரியாமல் வேலைக்கு சேர்த்து விட்டு பின்னாளில் பலர் அவதிப்படுகிறார்கள். பலர் வேலை செய்யும் இடத்தில் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் பணியாற்றுகிறார்கள்..

Maid arrested for stealing 35 sovereigns of gold jewellery from Erode teacher s house

ஒரு சிலர் தங்கம், பணத்தை பார்த்தவுடன் சலனப்படுகிறார்கள்.. தங்கள் வீட்டில் உள்ள வறுமையை போக்க புத்தி தடுமாறி திருடவும் செய்கிறார்கள்.. அப்படி திருடி சிக்கியவர்களே அதிகம். அதேபோல் சிலர் வயதான தம்பதியின் நம்பிக்கையை பெற்று, அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் நகை பறிப்பதும் அதிகமாக உள்ளது. எனவே வேலைக்காரர்களை நியமிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஈரோட்டில் வேலைக்கு சேர்ந்த 3 நாளிலேயே 35 பவுன் நகையை ஒருவர் திருடி சென்றுள்ளார்.. அவர் சிக்கியும் விட்டார்... என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் பாஷா.. வியாபாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி வியாபாரம் காரணமாக வெளியூர் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது. இவருடைய மனைவி பல்கீஸ் பேகத்திற்கு 58 வயது ஆகிறது. இவர் ஈரோட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் சென்னையில் படித்து வருகிறார்.

நியாஸ் பாஷா வியாபாரம் தொடர்பாக வெளியில் சென்று வந்ததாலும், நியாஸ் பாஷாவின் தந்தையை பார்த்து கொள்வதற்காகவும் ஆசிரியை பல்கீஸ்பேகத்தின் வீட்டில், ஜாஸ்மின் (40) என்பவர் கடந்த மார்ச் 1-ந்தேதி வேலைக்கு சேர்ந்தார். ஜாஸ்மின், அவர்களுடைய வீட்டிலேயே தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 4-ந் தேதி பல்கீஸ்பேகம் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் ஜாஸ்மின் இல்லை. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 35¾ பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு ஆடிப்போனார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்கீஸ் பேகத்தின் வீட்டிலேயே ஜாஸ்மின் தங்கி இருந்து வேலை செய்து வந்ததால், வீட்டில் நகை வைத்திருந்த இடத்தை அவர் தெரிந்து வைத்திருந்ததும், கடந்த 4-ந்தேதி பல்கீஸ்பேகம், நியாஸ் பாஷா ஆகியோர் வெளியே சென்றிருந்த போது பீரோவில் இருந்த 35 பவுன் நகையை ஜாஸ்மின் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் ஜாஸ்மின் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் ஜாஸ்மினை அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20½ பவுன் நகை, மீதமுள்ள நகையை விற்ற பணத்தில் வாங்கிய கார் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவற்றை போலீசார் மீட்டார்கள்.. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+