"ஷார்ப்" எடப்பாடி.. யாரந்த "விஐபி".. அதைவிடுங்க, தென்னரசை பாருங்க.. தொகுதிக்குள்ள ஒரே "அன்னியோன்யம்"
அதிமுக வேட்பாளர் தென்னரசு தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்
ஈரோடு: அதிமுக வேட்பாளர் தென்னரசு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார்.. அவருடன் பாஜகவினரும் கைகோர்த்து, மக்களிடம் ஓட்டுக்களை கேட்டு வருகிறார்கள்.
நடக்க போகும் இடைத்தேர்தலில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான், வேட்பாளரை எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்க முடிந்தது.
ஓபிஎஸ்ஸை டீல் செய்து கொண்டே, பாஜகவின் ஆதரவையும் பெற்று, இலை சின்னத்தையும் தக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இந்நிலையில், 3 விதமான ஐடியாக்களுடன், தேர்தல் களத்தில் காய்நகர்த்தி வருகிறாராம்.

3 ப்ளான்கள்
முதலாவதாக, ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ள நிலையில், மேலும் அதிகப்படியான வாக்கு வங்கியை பெற்றுவிடுவது, எம்பி தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறார். அடுத்ததாக, அதிமுகவுக்கு ஒரே தலைவர் தான் மட்டுமே என்பதுடன், நிரந்தர பொதுச்செயலாளர் என்ற புள்ளியை நோக்கி நகரவும் இந்த வாக்கு வங்கியானது உதவும் என்று கணக்கு போடுகிறார். மூன்றாவதாக, ஓபிஎஸ்ஸின் மிச்சமுள்ள குடைச்சலுக்கும், ஒரு முடிவுக்கட்ட இந்த இடைத்தேர்தலை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் யோசிக்கிறாராம். அதனாலேயே, எடப்பாடியின் பிரச்சார வியூகம் இந்த முறை புதுமாதிரியாக இருக்க போகிறது என்கிறார்கள்.

யாரந்த ஸ்பை
மூத்த தலைவர் செங்கோட்டையன் மொத்த பொறுப்பையும் இழுத்து போட்டு செய்து வருகிறார் என்றாலும், இந்த பிரச்சார வியூகம் குறித்து சில செய்திகள் கடந்த 2 நாட்களாகவே கசிந்து வருகின்றன.. அதன்படி, பிரச்சாரம் வியூகம் சம்பந்தமாக, தன்னுடைய வலதுகரம் கூட்டுறவு இளங்கோவனிடமும் பொறுப்பை தந்துள்ளதாக தெரிகிறது.. அதன்படி, ஒவ்வொரு பூத்திலும் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஒவ்வொருவரும் குறைந்தது அதிமுக அல்லாத 200 வாக்குகளையாவது உறுதிப்படுத்த வேண்டும் என்ற அசைன்மென்ட்கள் தரப்பட்டுள்ளனவாம்.

VIP புள்ளி
வாக்கு சேகரிக்கும்போது, மக்களிடம் அன்னியோயத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும், டீக்கடைக்குள் சென்று டீ போட்டுக் கொடுப்பது, துணி துவைத்து கொடுப்பது, கறி வெட்டி கொடுப்பது, இப்படிப்பட்ட செயல்களை தந்தால், தொகுதி மக்களையும் அது ஈர்க்கும், மீடியாவிலும் கவனிக்கப்படும் என்றெல்லாம் வியூகங்கள் வகுத்து தந்திருப்பதாக தெரிகிறது. இந்த பணிகளை எல்லாம், ரகசியமாக கண்காணித்து ரிப்போர்ட் அனுப்பும்படி, கொங்கு மண்டல விஐபி ஒருவருக்கு மறைமுகமாக உத்தரவு போட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. இது ஒருபுறமிருக்க, சம்பந்தப்பட்ட வேட்பாளர், வாக்கு சேகரிக்க களமிறங்கியதுடன், தொகுதிக்குள் கலக்கியும் வருகிறார்.

ஹேப்பி தென்னரசு
ஒருவேளை தனிச்சின்னத்தில் போட்டியிட நேர்ந்துவிடுமோ என்று கலங்கி கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, இரட்டை இலை சின்னத்துடன், ஹேப்பியாக தொகுதிக்குள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.. இவருடன் பாஜகவினரும் கலந்து கொண்டுள்ளனர்.. முன்னதாக கோயிலுக்கு சென்று கும்பிட்டுவிட்டு, அதற்கு பிறகு, தென்னரசுடவுன் பிரச்சாரத்தில் கைகோர்த்துள்ளனர்.. அந்தவகையில், முதலாவதாக, இஸ்திரி கடையில் நுழைந்து ஓட்டு கேட்டுள்ளார் தென்னரசு.. வெள்ளை சட்டைக்கு ஏற்கனவே இஸ்திரி போட்டு வைத்திருந்தார்கள் போலும்.. அதே வெள்ளை சட்டையை மறுபடியும் எடுத்து, இஸ்திரி போட ஆரம்பித்தார் தென்னரசு..

துணியை தேய்த்தார்
ஒரு துணி தேய்க்கும் கடையில் துணி தேய்த்தபடி, வித்தியாசமான முறையில் தென்னரசு வாக்கு சேகரித்தார்.. அந்த கடையில் ஒரு வெள்ளை சட்டையை இப்படியும், அப்படியுமாக திருப்பி போட்டு இஸ்திரியால் தேய்ப்பதை, அதிமுக, பாஜக நிர்வாகிகள் பக்கத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி, வீடுகளுக்கும், கடைகளுக்கும் சென்று வாக்குகளை கேட்டனர்.. நடுநடுவே ரோட்டோரத்தில் இருந்த டீ கடைகளில் டீ குடித்தபடியும், அந்த கடைக்கு வரும் மக்களிடமும் வாக்கு சேகரித்தனர்... இந்த தொகுதியை பொறுத்தவரை, தென்னரசுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. சுயேச்சையாக நின்றால் கூட 10 ஆயிரம் வாக்குகள் தென்னரசுவுக்கு உறுதியாம்.. அந்த அளவுக்கு தொகுதி மக்களிடம் இத்தனை காலமும் நெருங்கியே வந்துள்ளராம் தென்னரசு..!!
-
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!











Click it and Unblock the Notifications