நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறதா? வந்தால்.. அமைச்சர் செங்கோட்டையன் ஒரே போடு
சென்னை: தமிழகத்தில் ஆளும் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு தயாராக உள்ளது
"நம்பிக்கையில்ல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறதா? என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் யாரும் சொல்லவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் சந்திக்க அரசு தயாராக உள்ளது" என்றார்.
தமிழக தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றதே தவிர அக்கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவுகு 118 எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்.எல்., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்தது. தவெக அரசு கடந்த மே 13 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்தது.
6 மாதங்கள் முடிந்தது
நம்பிக்கையில்லா தீர்மனாம் கொண்டு வந்து 6 மாதங்கள் கழித்து மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இதன்படி நாளைக்கு, பிறகு எப்போது வேண்டுமானாலும் தவெக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மனாம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல முடியும். இதனால், கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நீடிக்கிறது.
தவெக அரசு மீது அவரது கட்சி எம்.எல்.ஏக்களே அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கடந்த வாரம் புதுக்கோட்டையில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாவே சமூக வலைத்தளங்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன.
தனித்தனியாக அழைத்து பேசிய விஜய்
இந்த நிலையில்தான் செங்கோட்டையன், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு அதனை எதிர்கொள்ள தயார் என்று கூறியுள்ளார். தவெக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரக்கூடிய நிலையில், நேற்று முதல்வர் விஜய், எம்.எல்.ஏக்களை தனித்தனியே சந்ந்தித்து பேசினார். சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலவர் விஜய், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களை தனித்தனியே அழைத்து பேசி அறிவுரைகளையும் சிலருக்கு எச்சரிக்கையும் விடுத்துதாக சொல்லப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில், தவெக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து முதல்வர் விஜய் பேசியது நேற்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக பலம் என்ன?
தமிழக சட்டமன்றத்தில் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா காரணமாக 5 இடங்கள் காலியாக உள்ளது. இதனால் தற்போதைய உறுப்பினர்கள் பலம் 229 ஆகும். இதில் பெரும்பான்மையை காட்ட 115 பேரின் ஆதரவு தேவை. தவெகவிற்கு தற்போது 109 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே பெரும்பான்மையை நிரூபிக்க மேற்கொண்டு 6 எம்.எல்.ஏக்கள் இருந்தால் போதும். காங்கிரஸ் (05) விசிக (02), ஐயூ.எம்.எல். (02) எம்.எல்.ஏக்கள் தற்போது உள்ளனர்.




Click it and Unblock the Notifications
