இனிமேல் தான் மெயின்பிச்கர்.. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அறிவிப்பு வரப்போகுது.. செங்கோட்டையன்
ஈரோடு: இப்போது வந்துள்ளது ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் இனிமேல்தான். என அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உற்சாகமாக பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக மற்றும் அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
தேர்தல் அறிக்கைகள் இனி அடுத்து வர உள்ளது. அதிமுக திமுக இரண்டுமே என்ன மாதிரியான திட்டங்களை அறிவிக்க போகின்றன, எதை இலவசமாக தரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வேறலெவலில் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் அறிமுகம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் பண்ணாரி என்பவரை கட்சியினரிடையே அறிமுகப்படுத்தி பேசினர்கள்.

1500 ரூபாய்
அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ள நிலையில் தற்போது இன்னும் மூன்று தினங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் வழங்கும் அறிவிப்பு உள்ளிட்டவைகளை முதல்வர் அறிவித்துள்ளர்.

டிரெய்லர
இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெறும் ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் இனிமேல்தான் வெளிவரப்போகிறது இன்னும் மூன்று தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது அதில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அறிவிப்புகள் வெளியாகும்.

அதிமுக தேர்தல் அறிக்கை
அதிமுக தேர்தல் அறிக்கை வந்தவுடன் திமுக காணாமல் போகும். பவானிசாகர் தொகுதியில் பண்ணாரி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அவருக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பேசினார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications