தமிழகத்தின் பிரபலம் யார்? ஸ்டாலினுக்கு முதலிடம்! உதயநிதியை முந்திய அண்ணாமலை! கமலை வென்ற சீமான்!சர்வே
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களில் மக்கள் மத்தியில் பாப்புலர் யாருக்கு அதிகம் இருக்கிறது என்பது பற்றிய புதிய சர்வே முடிவு வெளியாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அங்குள்ள மக்களிடம் தமிழ்நாட்டில் பிரபலமான அரசியல் கட்சி தலைவர்கள் யார்? என்ற கேள்வியுடன் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வேயின் முடிவில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ள நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2வது இடத்தில் உள்ளது. மேலும் இந்த சர்வே முடிவில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முந்திய நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முந்தியுள்ளார். மேலும் இதில் விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு உள்ள மக்கள் ஆதரவு பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கி உள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே உள்ளவர்கள் இன்று மாலையுடன் ஈரோடு கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வே முடிவு
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து Spick Media மற்றும் அஜய் பவுண்டேஷன் இணைந்து சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 17 ம் தேதி வரை இந்த சர்வே நடந்தது. 14,160 பேரிடம் 28 வகையான தமிழ், ஆங்கிலத்தில் வினாப்பட்டியல் வழங்கி சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முதலிடத்தில் ஸ்டாலின்
இந்த சர்வேக்கான 25வது கேள்வியாக, ‛‛தமிழ்நாட்டில் அதிக பாப்புலரான அரசியல் கட்சி தலைவர் யார்?'' என்பது இடம்பெற்றிருந்தது. இந்த கேள்விக்கு மக்கள் ஆர்வமாக பதில் அளித்துள்ளனர். அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் ஸ்டாலினும், 2வது இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளார். மேலும் இந்த பட்டியலில் ஸ்டாலின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, பாஜக தலைவர் அண்ணாமலை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

உதயநிதியை முந்திய அண்ணாமலை
இந்த கேள்விக்கு 25.35 சதவீதத்தினரின் ஆதரவுடன் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான முக ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 19.46 சதவீதம் பேரின் ஆதரவுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2வது இடத்தில் உள்ளார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என 14.77 சதவீதம் பேரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என 10.12 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

கமலை பின்னுக்கு தள்ளிய சீமான்
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் பெயரை 5.73 சதவீதம் பேரும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் என 4.99 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெயரை 3.29 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மேலும் தேமுதிமுக நிறுவன தலைவர் விஜயகாந்த் பெயரை 2.89 சதவீதம் பேரும், டிடிவி தினகரன் பெயரை 2.65 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ராமதாஸ, பிரேமலதா
பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரை 1.66 சதவீதம் பேரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயரை 1.66 சதவீதம் பேரும், தேமுதிக பொதுச்செயலாளரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா என 1.38 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 1.04 சதவீதம் பேரும், பதில் இல்லை என 5.47 சதவீதம் பேரும் தெரிவித்துள்னளர்.

வெற்றி யாருக்கு?
மேலும் இந்த சர்வே மூலம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. சர்வேயின்படி காங்கிரஸுக்கு ஓட்டளிப்பதாக 47.75 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஓட்டளிப்பதாக 6.66 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளிப்பதாக 6.88 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு ஓட்டளிப்பதாக 1.97 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 2.34 சதவீதம் பேரும், பதில் இல்லை என 4.40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications