முந்தும் நாம் தமிழர் கட்சி.. ஆஹா! இளம் வாக்காளர்கள் மத்தியில் சீமானுக்கு அமோக ஆதரவாம்! சர்வே ரிசல்ட்
ஈரோடு கிழக்கு தொகுதியில், இளம் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே முதலிடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு பெருவாரியாக ஆதரவு கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதம் ஆதரவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 28.5 சதவிகித ஆதரவும் உள்ளது.
அதாவது, இளம் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் வேட்பாளரை விட நாம் தமிழர் கட்சிக்கே அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட மக்கள் ஆய்வு கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 39.5 சதவிகிதம் ஆதரவும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு 24.5 சதவிகித ஆதரவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு 9.5 சதவிகித ஆதரவும், தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த்துக்கு 2 சதவிகித ஆதரவும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தியமுள்ள உச்சம்
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39.5 முதல் 65 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 24.5 முதல் 41 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக 4 சதவீத வாக்குகள் வரை பெறக்கூடும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முந்தும் நாம் தமிழர் கட்சி
மேலும், முதல் வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்குப்பட்ட இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு அமோக ஆதரவு வெளிப்படுவதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 21 வயதிற்குள்ளான வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதம் ஆதரவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 28.5 சதவிகித ஆதரவும் உள்ளது. அதாவது, காங்கிரஸை முந்தி, இளம் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதிமுகவுக்கு 17 சதவிகிதம், தேமுதிகவுக்கு 3 சதவிகித ஆதரவு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் முன்னிலை
மேலும் கல்வி, தொழில், சாதி, மதம், பாலினம் ஆகிய பிற அனைத்துக் காரணிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் முதலிடத்திலும் அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளுக்காக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 135 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1590 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications