Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு.. "நாம் தமிழர் எங்களுக்கு போட்டிதான்.. சாதாரணமாக பார்க்க முடியாது" அமைச்சர் முத்துசாமி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த முறை திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் திமுக அமைச்சரும் ஈரோடு மேற்கு எம்எல்ஏவுமான முத்துசாமி ஈடுபட்டார். அப்போது நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது போட்டி தான். சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துசாமி பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு வரும் பிப்ரவரி 5 ம் தேதி நடைபெறுகிறது.

erode east by election 2025 muthusamy ntk

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

கடந்த சட்டசபைத் தேர்தலிலும் சரி, அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலிலும் சரி அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் போட்டியிடவில்லை. மாறாக திமுக நேரடியாகக் களமிறங்குகிறது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

முதற்கட்டமாக ஈரோடு பெரியார் நகர் பகுதியில் இருந்து திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவருடன் அமைச்சரும் ஈரோடு மேற்கு எம்எல்ஏவுமான முத்துசாமி பிரச்சாரம் செய்தார். அங்கு வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் துண்டு அறிக்கைகளை வழங்கி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.

விதிமீறல் இருக்காது:

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "நாங்கள் தந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கருத்துகளைக் கூறினால் அதைக் கேட்டுக்கொள்வோம். தேர்தலுக்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்தவொரு விதிமீறலும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கமாகும்.

நாங்கள் அதிகாரத்தை எல்லாம் பயன்படுத்தவில்லை. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அந்த சுதந்திரம் இருக்கும் போது எங்களைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்" என்றார்.

நாம் தமிழர் போட்டி தான்:

நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்வுக்கு அமைச்சர் முத்துசாமி, "நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து வேட்பாளரை அறிவித்துள்ளது. ஒரு கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். இதனால் போட்டி இருக்கத்தான் செய்யும். எனவே இதனைப் போட்டியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிரச் சாதாரணமாகப் பார்க்க முடியாது" என்றார்.

மேலும், பெரியார் குறித்து சீமான் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி நேரடியாக எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.. இது தொடர்பான கேள்விக்கு இதுகுறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

நேர்மையாக நடக்கிறது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறாது எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, பிரேமலதா ஆகியோர் கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "எங்களால் மக்களிடம் சென்று வாக்கு மட்டுமே கேட்க முடியும். வாக்குச்சாவடிக்குச் சென்று எங்களுக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் எனச் சொல்ல முடியுமா?

வாக்குச்சாவடியில் சுதந்திரமாக வாக்கு செலுத்தும்போது எங்கள் மீது குற்றம் சொல்வது நியாயம் இல்லை. அவர்கள் எதிர்க்கட்சி என்பதால் எதாவது சொல்வார்கள். எனவே, அதையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+