சக்கர வியூகம்.. எடப்பாடிக்கு ஓபிஎஸ் வைத்த "பொறி".. எந்த பக்கம் போனாலும் ஆபத்து! இப்படி நடந்துடுச்சே

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

பொதுவாக யுத்த களத்தில் சக்ர வியூகம் என்பது மிகப்பிரபலம். யுத்த களத்தில் எதிரிகளை வெளியேற விடாமல் தடுக்கும் வகையில் அமைக்கப்படும் சக்கரம் போன்ற வியூகம்தான் இது. இதில் சிக்கும் எதிரியால் தப்பிக்கவே முடியாது.

அப்படி சக்கர வியூகத்தைதான் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வகுத்து இருக்கிறார். எடப்பாடி எந்த பக்கம் திருப்பினாலும் சிக்கல் என்ற அளவிற்கு மிக கடுமையான வியூகம் ஒன்றை வகுத்து இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அணி முடிவு செய்துள்ளது. இங்கே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதிமுக போட்டியிடும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று இது தொடர்பாக எடப்பாடி அணியினர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க ஆதரவு கேட்டனர். தேர்தலில் எடப்பாடியின் அதிமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இன்னொரு பக்கம் பாஜகவும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.

பாஜக

பாஜக

அதிமுக கூட்டணியில் தங்களுக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் பாஜக இங்கே போட்டியிட ஆலோசனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் திட்டத்தை உணர்ந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் முக்கியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

ஆசை

ஆசை

இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம். பாஜக போட்டியிடும் பட்சத்தில் தேசிய கட்சி என்பதற்காக அவர்களுக்கு எங்களின் ஆதரவை தெரிவிப்போம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாடாக இது பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடிக்கு எதிராக மேற்கூறிய சக்கர வியூகத்தை.. வேட்டை பொறியை உருவாக்கி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். எடப்பாடி எங்கே சென்றாலும் சிக்கல் என்ற என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்.

சிக்கல்

சிக்கல்

ஓ பன்னீர்செல்வம் தனது நிலைப்பாடு மூலம் எடப்பாடிக்கு எதிராக உருவாக்கி இருக்கும் சிக்கல்கள் பின்வருமாறு.

1. ஓபிஎஸ் போட்டிக்கு வேட்பாளரை நிறுத்துவால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்.

2. இரட்டை இலை சின்னம் முடங்கினால் அதிமுகவில் மேலும் பிளவு ஏற்பட்டு நிர்வாகிகள் அணி மாறும் அபாயம்.

3. இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்றால் ஓபிஎஸ்ஸை எடப்பாடி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம்

4. ஓபிஎஸ்ஸை சமாளிக்க பாஜகவுடன் சமாதானமாக எடப்பாடி செல்ல வேண்டிய கட்டாயம்.

5. பாஜக வேட்பாளரை ஆதரிக்க தயார் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி மட்டும் பாஜக வேட்பளாரை ஆதரிக்காமல் தனியாக வேட்பாளரை நிறுத்தினால், எடப்பாடி பாஜகவிற்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

6. பாஜக மேலிட ஆதரவை ஓபிஎஸ் பெற வாய்ப்பு உள்ளது. சட்ட போராட்டங்களில் இது எடப்பாடிக்கு எதிரான முடிவுகள் வர வழி வகுக்கும்.

7. இந்த இடைத்தேர்தல் மோதல்களால் சின்னம் முடங்கும் அபாயம் உள்ளது. அப்படி முடங்கி திமுக வென்றால், எடப்பாடிக்கு " ஆளுமை" ரீதியாக அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+