நடிகர் பெஞ்சமினை விரட்டிய மக்கள்! ஜூஸ் பாட்டிலில் இருந்த போட்டோவால் கோபம்.. மதமாற்ற குற்றச்சாட்டு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இயேசு படம் மற்றும் கிறிஸ்தவ வசனங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில் மூலம் பொதுமக்களுக்கு நடிகர் பெஞ்சமின் ஜூஸ் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறி சிலர் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெஞ்சமின் அங்கிருந்து தனது நண்பர்களுடன் காரில் புறப்பட்டு சென்றார்.
தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வருபவர் பெஞ்சமின். இவர் வெற்றி கொடிக்கட்டு, ரன், பகவதி, சாமி, ஆட்டோகிராப், திருப்பாச்சி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருப்பாச்சி திரைப்படத்தில் கண்ணப்பன் என்ற கேரக்டரில் நடிகர் விஜயின் நண்பராக நடித்து இருப்பார். இந்நிலையில் தான் நடிகர் பெஞ்சமின் காரில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
பெஞ்சமின் தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு சென்றார். பெஞ்சமின் நடிகர் என்பதால் அவரை பார்க்க அங்கிருந்த மக்கள் திரண்டுள்ளனர். நேற்று மதியம் ஒரு சொகுசு கார் வந்து நின்றது. காரில் இருந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் 2 பேர் இறங்கி பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் ஜூஸ் பாட்டில் வழங்கினர்.
அந்த ஜூஸ் பாட்டிலில் இயேசுவின் போட்டோ இடம்பெற்றிருந்தது. அதேபோல் கிறிஸ்தவ வாசகங்களும் இருந்தது. இதனை பார்த்ததும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் பெஞ்சமின் மற்றும் அவருடன் வந்திருந்த 2 பேரை சூழ்ந்து கொண்டு யார் நீங்கள்? எதற்காக வந்தீர்கள்? பொதுமக்களுக்கு ஏன் இயேசுவின் படம் பொறிக்கப்பட்ட ஜூஸ் பாட்டில் வழங்குகிறீர்கள்? மதமாற்றம் செய்கிறீர்களா? என கேள்விகள் கேட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் பெஞ்சமின் மற்றும் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டனர். இதனையடுத்து நடிகர் பெஞ்சமின் தன்னுடன் வந்தவர்களை காரில் ஏற்றிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் அந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
நடிகர் பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் இயேசு படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கருடன் ஜூஸ் வழங்கியது மற்றும் பெஞ்சமினிடம் அங்கிருந்தவர்கள் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications