Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைது செய்ய வந்த போலீஸ்.. கிணற்றில் குதித்த பத்திரப்பன்.. சத்தியமங்கலத்தில் அக்கப் போர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கைது செய்ய வந்த போலீஸ்.. கிணற்றில் குதித்த பத்திரப்பன்.. - வீடியோ

    சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், அடிதடி வழக்கில் கைது செய்ய வந்த போலீசாரை கண்டு தப்பிப்பதற்காக கிணற்றில் குதித்த நபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அங்கணகவுண்டன்புதூர் கிராமம் ராமர்கோவில் வீதியைச் சேர்ந்தவர் பத்திரப்பன். இவருக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பும் முறைத்துக் கொண்டன. சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

     person jumps into well to avoid police

    இந்த வழக்கு காரணமாக பத்திரப்பனை கைது செய்வதற்காக இன்று காலை சத்தியமங்கலம் போலீசார் சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு பயந்த பத்திரப்பன் தப்பிப்பதற்காக வீட்டுக்கு முன்புறமாக உள்ள 25 அடி கிணற்றில் குதித்தார். இதைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஈஸ்வரன் மற்றும் வீரர்கள் கிணற்றில் விழுந்த பத்திரப்பனை உயிருடன் மீட்டனர்.

    கிணற்றில் விழுந்த பத்திரப்பனை லேசான காயத்துடன் மீட்கப்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசாருக்கு பயந்து கிணற்றில் குதித்த நபரை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+