பெருந்துறை இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளராக திவ்யா சத்யராஜ்? திடீரென ஸ்டாலினை சந்தித்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவும் நிலையில், அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நிறுத்தப்பட உள்ளாரா? என்ற பரபரப்பு திமுகவினரிடையே அதிகரித்துள்ளது. முக ஸ்டாலினை இன்று அவர்ச் சந்தித்தது இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

நடிகர் சத்யராஜ்ஜின் மகளும் திமுக தகவல் தொழில்நுட்ப அணித் துணைச் செயலாளர் பொறுப்பு வகிப்பவருமான திவ்யா சத்யராஜ் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலினை திவ்யா சத்யராஜ் சந்தித்தார்.

Perundurai by election Will Divya Sathyaraj enter the fray as the DMK candidate

விரைவில் குட் நியூஸ் சொல்கிறேன்

திவ்யா சத்யராஜ் அண்ணா அறிவாலயம் வந்த நிலையில், அவரை பார்த்த திமுகவினர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். திடீரென அண்ணா அறிவாலயத்திற்கு வந்து ஸ்டாலினை திவ்யா சத்யராஜ் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பெருந்துறை தொகுதியில் திமுக சார்பாக களமிறங்க போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ஸ்டாலினை சந்தித்தது பற்றி திவ்யா சத்யராஜ் கூறியதாவது:- "ஸ்டாலினை பார்த்து ரொம்ப நாள் ஆனதால் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். இது ஒரு சாதாரணமான சந்திப்புதான். விரைவில் குட் நியூஸ் சொல்கிறேன்" என்றார்.

இடைத்தேர்தலில் போட்டியிட போறீங்களா?

பெருந்துறை வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக பேச்சு அடிபடுவது பற்றி கேட்டதற்கு பதிலளித்த திவ்யா சத்யராஜ், இப்போதைக்கு கருத்து இல்லை. விரைவில் சொல்கிறேன். தலைமை வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன். போட்டியிடுவதற்கு விருப்பம் உள்ளதா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் உள்ளது. தவெக ஆட்சியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. வளர்ச்சி இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆளும் கட்சி அதை கண்டிப்பதும் இல்லை" என்றார்.

இன்று ஸ்டாலினை சந்தித்தது ஏன்?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். சட்டமன்ற தேர்தல் முடிந்த சில நாட்களில் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தார். இதனால், பெருந்துறை தொகுதி காலியாக உள்ளது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் போது பெருந்துறை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை திவ்யா சத்யராஜ் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெருந்துறை தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் திமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டார். அதிமுக சார்பாக ஜெயக்குமார் போட்டியிட்டார். தவெக சார்பில் அருணாசலம் என்பவரும் போட்டியிட்டார்.

கடந்த பொதுத்தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

இதில் ஜெயக்குமார் 70,302 வாக்குகளும், தோப்பு வெங்கடாசலம் 60,609 வாக்குகளும், அருணாசலம் 59,483 வாக்குகளும் பெற்று இருந்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக ஜெயக்குமார் போட்டியிட்டு இருந்தார். இதில் ஜெயக்குமார் 85,125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார்.

அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில், நடைபெற உள்ளதால் அந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, தவெகவை வீழ்த்த திமுகவும் வியூகம் வகுத்து வருகிறது. இந்த சூழலில்தான் திவ்யா சத்யராஜ் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளாரா? என்ற பேச்சு இன்றைய சந்திப்புக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அடிபட தொடங்கியுள்ளது.

தவெகவுக்கு நெருக்கடி

அதே நேரத்தில் ஆளும் கட்சியாக உள்ள தவெகவிற்கு இடைத்தேர்தல் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற நிலையே உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளால் கடும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கும் தவெக, 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+