சிஎம் விஜய் ஒரு வார்த்தை பேசலயே.. பெருந்துறை பெண் நர்ஸ் கடத்தி கொடூர கொலை.. கேட்கவே கொதிக்குதே

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாயமான 26 வயது இளம் நர்ஸ், தேசிய நெடுஞ்சாலை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக முதல்வர் விஜய் இதை பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாதது கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

விஜயமங்கலம் அருகே உள்ள கைகோளம்பாளையத்தைச் சேர்ந்தவர் உத்திரா (26). இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். உத்திரா, கடந்த அக்டோபர் 3-ம் தேதி பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியில் சேர்ந்தார்.

perundurai Erode

வழக்கம்போல அக்டோபர் 14-ம் தேதி காலை உத்திரா பணிக்குச் சென்றார். மாலை 7:00 மணி அளவில் பணி முடிந்ததும், வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த பழக்கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் மாயமானார்; வீடு வந்து சேரவில்லை. மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவர் ரஞ்சித் குமார், உத்திரா ஏற்கனவே கிளம்பிவிட்டதாக அறிந்ததும் அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடினார். எங்கும் தகவல் கிடைக்காததால், உடனடியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், அக்டோபர் 17-ம் தேதி இரவு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகேயுள்ள முட்புதரில் பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாகப் பெருந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டுப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையில், மீட்கப்பட்ட உடல் மாயமான உத்திரா என்பது உறுதி செய்யப்பட்டது. உடலைப் பார்த்து கதறி அழுத கணவர் ரஞ்சித் குமார், கடுமையான மன உளைச்சலில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த உறவினர்களும் பொதுமக்களும் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

உத்திரா அணிந்திருந்த சுமார் மூன்று பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளன. வேலை முடிந்து தனியாகச் சென்ற அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று, நகைகளைப் பறித்துக்கொண்டு கொடூரமாகத் தாக்கி கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா என்பது உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி தரும் கொலை

இந்தச் சம்பவம் குறித்து உத்திராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்துக் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அக்டோபர் 14-ம் தேதியே புகார் அளித்தபோது, ஊத்துக்குளி போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகவும், தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் விஜய் இதை பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாதது கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

புகாரை உடனடியாக விசாரித்து தீவிரமாகத் தேடியிருந்தால் உத்திராவை உயிரோடு மீட்டிருக்க முடியும் என்று கூறி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது பெருந்துறை மற்றும் ஊத்துக்குளி போலீசார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலைப் பகுதி மற்றும் பழக்கடை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும், உத்திராவின் மாயமான செல்போன் சிக்னல்களைக் கண்டறியவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துயரச் சம்பவம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தையும், இரவு நேரங்களில் பணி முடிந்து திரும்பும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+