மன்னித்து விடுங்கள்.. தம்பியை பார்த்துக் கொள்ளுங்கள்.. தற்கொலை கடிதத்தில் ஸ்ரீமதி உருக்கம்
ஈரோடு: டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சர்ந்தவர் தங்கராஜ் (45). இவருடைய மனைவி தேவி(43). இவர்களுக்கு ஸ்ரீமதி (20), வருண்ஸ்ரீ (16) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முடித்துள்ளார் ஸ்ரீமதி.

அறை
ஐஏஎஸ் படிக்க விரும்பியதால் அவர் டெல்லியில் உள்ள ஒரு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன்பு சேர்ந்தார். அந்த மையத்தின் மாடியில் உள்ள கட்டடத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மற்றொரு மாணவி வெளியே சென்றுவிட்டு அறைக்கு வந்துள்ளார்.

பெற்றோருக்கு தகவல்
அப்போது ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதையடுத்து அவரை மீட்பு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அறையில் ஒரு கடிதத்தையும் மீட்டனர். அதில் என்னை மன்னித்து விடுங்கள். தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீமதி தீபாவளிக்கு ஊருக்கு வருவதாக தனது குடும்பத்தினரிடம் இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை
இதையடுத்து ஸ்ரீமதியின் உடல் இன்று சத்தியமங்கலம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் படிக்க செல்லும் மாணவர்கள் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications