'அமைச்சரையே தூக்கி உள்ளே வைத்துடுவேன்'.. அறநிலையத்துறை முதல் பாஜக வரை.. பொங்கிய பொன் மாணிக்கவேல்
ஈரோடு: "நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்" என்று முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சிலைகள் மீட்பு, கோயில்கள் வாடகை பாக்கி, அர்ச்சகர்கள் சம்பளம் உள்பட பல்வேறு விஷயஙகளில் அறநிலையத் துறை மீது முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட அறநிலையத்துறையால் கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடங்களுக்கு கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி வர வேண்டி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறிவிட்டு, அதில் கமிஷன் அடிக்கிறார்கள்.
திருப்பணி என்ற பெயரில் தொன்மையை அழித்துக்கொண்டு வருகிறார்கள். பழனியில் 16-ம் நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகள் அழிந்து விட்டது. திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்ய எந்த தகுதியும் இல்லை. கோவில் புதுப்பிக்கும் பணியை மாநில ஆர்க்கியாலஜி துறை தான் செய்யவேண்டும்.
அறநிலையத் துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் கோயில் வருமானங்கள் மூலம்தான் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் 2 உதவியாளர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் சம்பளமாம். என்ன சார் அநியாயம் இது.. கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக அறநிலையத் துறையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறாங்க. இதையெல்லாம் சொன்னால் நான் விளம்பரத்திற்காக செயல்படுவதாக குற்றம்சாட்டுறாங்க,.. விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது.
இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும். அர்ச்சகர்கள் இல்லை என்றால் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படும். எந்த வேலையும் செய்யாத அதிகாரிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளமாம். ஆனால், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு வெறும் 4500 ரூபாய்தான் சம்பளம் என்கிறார்கள்.
வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று உள்ளது. பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழிந்துவிடும். சைவ வைணவர்களின் ஒற்றுமை உடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க காவல்துறையுடன் சிலைகளை மீட்க ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க நடவடிக்கைவேண்டும்.
வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியில் அமர்த்தக்கூடாது. மிகவும் நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக அறநிலையத்துறை உள்ளது. ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை நான் செய்யவில்லை. கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர்.
நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன். அறநிலையத் துறை பற்றி பேசினால் நான் பாஜகவில் சேரப்போவதாகவும் பதவிகளைப் பெறப்போவதாகவும் சொல்கிறார்கள். நான் எந்தக் காலத்திலும் கட்சியில் சேரமாட்டேன். அப்படி சேர்ந்தால் என் சட்டைக் காலரை பிடித்து நீங்கள் கேள்வி தாராளமாக கேட்கலாம்" இவ்வாறு பொன் மாணிக்கவேல் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications