மகனுக்கு மாநிலங்களவை எம்பி பதவி? அதிமுக எங்களை ஏமாற்றவில்லையே! பிளேட்டை திருப்பிப் போட்ட பிரேமலதா!
ஈரோடு: ஆளும் கட்சி ஆண்ட கட்சிகள் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்றும், ஆனால் கூட்டணி ஆட்சி தான் என்ற சூழல் உருவாகும் தேர்தல் முடிவுகள் பிறகு கூட்டணி ஆட்சி அமையும் போது வரும் போது தேமுதிக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் என ஈரோட்டில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினர் விவகாரத்தில் அதிமுக ஏமாற்றவில்லை என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்," டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் குருபூஜை சென்னையில் நடைபெற இருக்கிறது. ஜனவரி 9ம் தேதி கடலூரில் மக்கள் உரிமைமீட்பு 2.0 கூட்டம் நடைபெற இருக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்
திமுக ஆட்சியில் இருப்பதால் திமுகவை பார்த்து தான் கேள்வி கேட்க முடியும், திமுக -அதிமுக கட்சிகளாக பார்க்காமல், ஆட்சியாளர்களை தான் மக்கள் கேள்வி கேட்பார்கள். அதைதான் தேமுதிக பிரதிபலிக்கிறது.ஆளும் கட்சியான திமுக தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றி விட்டு தான் சொல்வார்கள். ஆனால் தேமுதிக மக்களை சந்தித்து வருவதால் திமுக தேர்தல் வாக்குறுதியை 50சதவீதம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதனால் இன்னும் இருக்கும் நான்கு மாதங்களில் மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென தேமுதிக வலியுறுத்துகிறது.
தேமுதிக
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் விஜயகாந்தை முன்வைத்து பேசுகிறார். ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை. ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. ஆனால் கூட்டணி இல்லாமல் களத்தில் இருக்கலாம் என நிருப்பித்தவர் விஜயகாந்த். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கூட்டணி ஆட்சி தான் அமையும் என எல்லாருடைய கருத்தாக உள்ளது. கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு வரும்போது தேமுதிக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும்..
அதிமுக
அதிமுக ஏமாற்றவில்லை. ஆனால் வருடம் நோட் செய்யவில்லை. அதிமுகவில் வருஷம் போடுவது தலைவர்கள் காலத்தில் வழக்கம் இல்லை என்று சொல்கிறார். கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சிக்கு தான் தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கும். இப்போது இருக்கும் கட்சிகள் கூட்டணி தர்மத்தை மதிக்கிறார்கள். ஒரு எம்பிக்காக அதிமுக கூட்டணி வைப்போம் என்று சொல்ல முடியாது. இப்போது நடக்க இருக்கும் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் கழக நிர்வாகிகள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயம் ஆட்சி அமையும்" என கூறியுள்ளார்.
தமிழக அரசியல்
2021 சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தேமுதிக அமுமுக உடன் சேர்ந்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் இரு கூட்டணிகளுக்குமே தோல்வியை தந்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலின் போது ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு தருவதாக அதிமுக உறுதி அளித்ததாகவும், நாகரீகம் கருதி அந்த கடிதத்தை வெளியிடவில்லை என பல பேட்டிகளில் கூறியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில் அதிமுக ஏமாற்றி விட்டதால் அவர் திமுக கூட்டணிக்கு செல்லலாம் என சொல்லப்பட்டது. தற்போது தேமுதிக அதிமுக கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில் ஒப்பந்தத்தில் வருடம் குறிப்பிடவில்லை, அதிமுக தங்களை ஏமாற்றவில்லை என பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications