அதிமுகவை ஒருங்கிணைக்க பார்க்கும் பாஜக.. "ரெயின்போ" பிளான்.. எடப்பாடிக்கு உள்ள ஒரே வழி.. என்னாச்சு?
அதிமுகவில் ஜாதி ரீதியாக நிர்வாகிகள் பிரிந்து உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைதேர்தலால் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக பிரஷர் கொடுக்கும், அதிமுகவில் எல்லோரையும் இணைக்க வேண்டும் என்று பாஜக பிரஷர் கொடுக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக வந்ததில் இருந்தே அந்த கட்சி வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது.
1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அதிமுகவின் இந்த தோல்வியால் எடப்பாடிக்கு பாஜக பிரஷர் போடும் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கில் ஒன்றும் திமுக எதுவும் மந்திரம் செய்து ஜெயிக்கவில்லை. அதிமுகவிற்கு இது தெரியும். ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி எப்படி காய் நகர்த்துவார் என்று அதிமுகவிற்கு தெரியும். ஆனாலும் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் இருந்தும் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. அவர்கள் மிக மோசமான தோல்வியை அடைந்து உள்ளனர். அப்படி என்றால் அவர்களிடம் எதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். அடிப்படையிலேயே எதோ தவறு உள்ளது தானே? ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும்.

கூடைக்கு கீழ்
அதாவது எதிர்க்கட்சிகள் ஒரு கூடைக்கு கீழ் வர வேண்டும். கருணாநிதி இதைத்தான் செய்தார் எதிர்க்கட்சியாக இருந்த போது. இதை ரெயின்போ கூட்டணி என்பார்கள். பல கட்சிகள் எதிர் தரப்பில் இணைய வேண்டும். இதைத்தான் பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் சொன்னார். தேசிய அளவில் கூட்டணி உருவாக வேண்டும் என்று கூறினார். இதைத்தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் செய்திருக்க வேண்டும். இதே தேர்தல் தேனி, ஆண்டிபட்டியில் நடந்து இருந்தால் ரிசல்ட் இன்னும் மோசமாகி இருக்கும். ஜாதி ரீதியாக அதிமுக பிளவுபட்டு இருக்கிறது.

ஜாதி நிர்வாகிகள்
அதிமுகவில் ஜாதி ரீதியாக நிர்வாகிகள் பிரிந்து உள்ளனர். எல்லோரும் ஒன்றாக இருந்தால் வெற்றிபெற முடியும். ஆனால் அதிமுகவிற்கு இது புரியவில்லை. எடப்பாடிக்கு இது புரியவில்லை. எடப்பாடி என்ன நினைக்கிறார், இவர்கள் மூவரையும் சேர்க்க கூடாது என்று நினைக்கிறார். அரசியல் என்பது பணமாகிவிட்டது. என்னிடம் காசு இருக்கிறது. நான் ஏன் உங்களிடம் இருக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால்தான் சசிகலாவிடம் அவர் இணைய மறுக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இந்த பிரச்சனை இல்லையே. ஆனால் அதிமுக, திமுகவில் ஈகோ மோதல் இருக்க காரணம்.. இவர்களிடம் பணம் உள்ளது. பணம் உள்ளதால் நான் ஏன் இறங்கி போக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தனியாக பார்க்கலாம்
என்னிடம் பணம் இருக்கிறது. அதனால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால்தான் அவர் தனியாக இருக்கிறார். ஆனால் எடப்பாடி உட்பட்ட எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இந்த தேர்தல் தோல்வியில் மார்ஜினை எடப்பாடி குறைத்து இருந்தால் கதையே வேறு. எடப்பாடி மட்டும் அதை செய்து இருந்தால் ஓபிஎஸ், அண்ணாமலை, சசிகலா எதையும் செய்திருக்க முடியாது. ஆனால் எடப்பாடி அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறார். இதனால் அவருக்கு கண்டிப்பாக ஓபிஎஸ், சசிகலா, அண்ணாமலை பிரஷர் கொடுப்பார்கள். ஒருங்கிணைந்த அதிமுக பாஜகவிற்கு தேவை. அப்போதுதாம் 2024ல் குறிப்பிட்ட இடங்களை பாஜக இங்கே பெற முடியும். இப்போது இருக்கும் உடைந்த அதிமுகவை வைத்துக்கொண்டு பாஜகவை வெல்ல முடியாது. அதனால் பாஜக அதிமுகவை ஒருங்கிணைக்கவே பார்க்கும். அதுதான் பாஜகவின் பிளானாக இருக்கும், என்று பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications