திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி அரிய வகை லங்கூர் குரங்கு குட்டி பலி! சடலம் அருகே பரிதவித்த தாய்!

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி அரிய வகை லங்கூர் குரங்கு குட்டி ஒன்று உயிரிழந்தது.

சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த குட்டியின் அருகே, அதன் தாய் குரங்கு நீண்ட நேரம் தவித்தபடி நின்ற காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

திம்பம் மலைப்பாதையில் சாலையோரம் குரங்குகளுக்கு சிலர் பிஸ்கட், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்குவதால், அவை உணவுக்காக வாகனங்களை நோக்கி சாலைக்கு வருவதாக கூறப்படுகிறது.

Langoor Monkey

இதனால் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து வன உயிரின மற்றும் சமூக ஆர்வலர் நந்தகுமார் கூறுகையில், "வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை மெதுவாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிரிழந்த குட்டி ஒருபுறம்... அதை விட்டு பிரிய முடியாமல் தவித்த தாய் மறுபுறம்... திம்பம் மலைப்பாதையின் இந்த சோகக் காட்சி வன உயிரின பாதுகாப்பில் மனிதர்களின் பொறுப்பை உணர்த்தியுள்ளது.

இந்த குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் காணப்படுகின்றன. கருப்பு நிற ரோமங்களுடன் தலையில் மட்டும் மஞ்சள் அல்லது பழுப்பு நிற முடிகள் காணப்படும். இதிலேயே தங்க லங்கூர் குரங்குகளும் உள்ளன. இவை அஸ்ஸாம், பூடான் எல்லை பகுதிகளில் காணப்படுகிறது. இதன் தங்கம், கிரீம் கலந்த முடிகள் சூரிய ஒளி படும்போது ஜொலிக்கும். இது உலகிலேயே அரிய வகை குரங்கு ஆகும்.

இவை முழுக்க முழுக்க தாவர உண்ணிகள். மரத்தின் இலைகள், துளிர்கள், பழங்கள், பூக்களை உண்டு வாழும். லங்கூர் குரங்குகள், மனித நடமாட்டத்தை விரும்பாது. எனவே அடர்ந்த காட்டு பகுதிகளிலும் மர உச்சிகளிலும் மட்டுமே வாழும் இயல்பு கொண்டவை.

Langoor Monkey

கோத்தகிரி சாலையோரங்களில் கூட அரிய வகை லங்கூர் குரங்குகள் காணப்படுகின்றன. அவை தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த குரங்குகள் ஊட்டி, மசினகுடி, மந்தூர் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளிலும் காணப்படுகிறது.

இந்த குரங்குகள் அவ்வப்போது சாலையோரங்களில் தென்படுகின்றன. இவற்றை பார்த்து சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். குரங்குகளுக்கு பிஸ்கட் போடும் போது நிறைய குரங்குகள் வருவதால் அந்த வழியில் செல்லும் மற்ற வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இது போல் வன உயிரினங்களுக்கு யாரும் உணவு பொருட்களை கொடுக்க வேண்டாம் என வனத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+