20 நிமிடத்தில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் ரூ.1000 பரிசு.. ஈரோட்டில் ஓட்டலையே காலி செய்த மக்கள்
ஈரோடு: 20 நிமிடத்தில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் ரூ.1000 பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்த புதிய ஓட்டலை பொதுமக்கள் சாப்பிட்டே காலி செய்தனர்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பரோட்டோ சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் 50 பரோட்டோ சப்பிட்டால் 100 ரூபாய் பரிசு என்று அறிவிப்பார் ஓட்டல் உரிமையாளர். அந்த பந்தயத்தில் ஓட்டல் உரிமையாளரை சூரி சாப்பிட்டே மிரள வைப்பார்.. அப்படிப்பட்ட பந்தயங்கள் தமிழகத்தில்அடிக்கடி நடக்கின்றன. ஈரோடு அருகே ஓட்டலில் பந்தயம் நடந்துள்ளது. அதனை பார்ப்போம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள குன்னத்தூர் சாலையில் புதிதாக அசைவ உணவகம் திறக்கப்பட்டது. இந்த ஒட்டலை பிரபலப்படுத்த வாடிக்கையாளர்களை கவரும் வகையில், உணவு சாப்பிடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல் அறிந்து திரண்ட உணவுப்பிரியர்கள், போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தனர்... போட்டியும் நடந்தது.
விதிமுறைப்படி பரிமாற்ற உணவுகள் அனைத்தையும் 20 நிமிடத்தில் சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனையாகும். அதன்படி போட்டியில் பங்கேற்றவர்கள், சிக்கன் பிரியாணி, மட்டன், நாட்டுக்கோழி, பள்ளிப்பாளையம் வறுவல், சில்லி சிக்கன், வாத்துக்கறி, எலும்புக்குழம்பு, சாப்பாடு, ஆட்டுக்கால் சூப், முட்டை, மீன் ரோஸ்ட், மீன் குழப்பு, ரசம், தயிர் பீடா உள்ளிட்டவைகளை சாப்பிட்டனர்.
ஓட்டலின் துவக்க விழாவை ஒட்டி நடத்தப்பட்ட இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள். இதனால் அந்த கடையின் உரிமையாளர் பாபு மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட பலர், எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், சிக்கன் பிரியாணி, மட்டன், நாட்டுக்கோழி, பள்ளிப்பாளையம் வறுவல், சில்லி சிக்கன், வாத்துக்கறி, எலும்புக்குழம்பு, சாப்பாடு, ஆட்டுக்கால் சூப், முட்டை, மீன் ரோஸ்ட் என பல உணவுகளை ஆர்வத்துடன் உண்டு ரசித்தனர்.
இவர்களில் சீனாபுரத்தைச் சேர்ந்த ராம் என்பவர் முதல் பரிசான ஆயிரத்தை தட்டிச் சென்றார். வெறும் 20 நிமிடத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன், நாட்டுக்கோழி, பள்ளிப்பாளையம் வறுவல், சில்லி சிக்கன், வாத்துக்கறி, எலும்புக்குழம்பு, சாப்பாடு, ஆட்டுக்கால் சூப், முட்டை, மீன் ரோஸ்ட், மீன் குழப்பு, ரசம், தயிர் பீடா என அத்தனை உணவுகளையும் சாப்பிட்டு அசத்தினார். இரண்டாவது பரிசாக 800 ரூபாயும், 3வது பரிசாக 500 ரூபாயும் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications