ரங்கன் வாத்தியாரை சூப்பரா யூஸ் பண்ணியிருக்கும் ஈரோடு போலீஸ் .. பதிலுக்கு நெட்டிசன்கள் சர்ப்ரைஸ்
ஈரோடு: தமிழகம் முழுவதும் வைரலாகி வரும் சார்பேட்டா வாத்தியார் மீம்ஸ்யை சூப்பரா யூஸ் பண்ணியிருக்காங்க ஈரோடு மாவட்ட காவல்துறை. மீம்ஸ் தான் இனி இன்றைய இளைய தலைமுறை மக்களுக்கு நல்ல பாடத்தை தருகிறது என்பதை உணர்ந்து மாஸ்க் போட வைக்க இப்படியான முறையை கையாண்டுள்ளது காவல்துறை.. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய அணுகுமுறை இது.
Recommended Video
ஒரு விஷயத்தை, ஒரு நகைச்சுவையாக, அல்லது ஒரு கேலிக்குரிய விஷயத்தை அப்படியே கூறுவதை விட, பிரபல தமிழ் சினிமாவில் காட்சிகள் அல்லது படத்தில் வரும் நடிகர்களின் முகபாவணைகளில் சொன்னால் பெரிய அளவில் வைரலானது. அதாவது மீம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கேலி சித்திரங்கள் வைரலாகி வருகின்றன.
மீம்ஸ் உலகில் தமிழ் சினிமாவின் காமெடி டெம்பளேட்கள், சிரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட து. ஆனால் காலம் செல்ல செல்ல, நல்ல கருத்துக்களை வைத்து மீம்ஸ் டெம்ப்ளேட்களை மாற்றும் போக்கு அதிகரித்தது.

வைரல் வீடியோக்கள்
இப்படி சமூக நலக்கருத்துக்கள் சார்ந்த மீம்ஸ்களால் 500 பேருக்கு சேர வேண்டிய தகவல் 5 லட்சம் பேருக்கு போய் சேர்ந்தது. இதில் மீம்ஸ் நாயகன் யார் என்றால் உடனே சொல்லிவிடலாம்., அது வடிவேலுதான். அதற்கு அடுத்துதான் மற்ற காமெடி நடிகர்கள். புகைப்படம் மட்டுமின்றி வீடியோவிலும் வடிவேலு, கவுண்டமனி செந்தில் காமெடிகளை வைத்து கிண்டல் செய்வது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

கபிலன் சைக்கிள்
சரி போதும்.. சும்மா வழவழ கொழகொழ என சொன்னால் கடுப்பாகிவிடுவீர்கள்.. விஷயத்திற்கே வருகிறேன்.. இன்றைக்கு சார்பேட்டா படத்தின் வாத்தியார் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய டிரெண்டிங் என்பது உங்களுக்கே தெரியும். சார்பேட்டா படத்தில் ரங்கன் வாத்தியாரை கபிலன் (பசுபதி / ஆர்யா) சைக்களில் கொண்டு செல்லும் அந்த காட்சி மீம்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் பேரால் பகிரப்படுகிறது.

சிரிக்காதவர்கள்
ரங்கன் வாத்தியார் மற்றும் கபிலனை வைத்து எத்தனை எத்தனை மீம்ஸ், எண்ணில் அடங்கா கற்பனைகளில் தினமும் உருவாகி வருகிறது. அப்படி உருவான பல மீம்ஸ்களை பார்த்து வாய்விட்டு சிரிக்காதவர்களே இல்லை. இதனிடையே பாவம் சார் வாத்தியார், சுகர் பேசண்ட், விட்டுறங்க என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
ஆனால் விடுவதாக இல்லை நம்மவர்கள்..

மாஸ்க் மீம்ஸ்
பாவம் ரங்கன் வாத்தியார் இன்னமும் சைக்களில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஈரோடு மாவட்ட காவல்துறை. ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் செல்வதை வைத்து ஒரு மீம்ஸ் போட்டுள்ளது. அந்த மீம்ஸில், கபிலன் ரங்கன் வாத்தியாரிடம் கேட்கிறார்.. வாத்தியரே மாஸ்க் போடமா போறோமே தப்பில்லையா என்கிறார். அதற்கு வாத்தியார், தப்பு தான், ஓரமா நிறுத்து.. மாஸ்க் வாங்கிட்டு போவோம்.. என்கிறார்.

மாஸ்க்கில் ரங்கன் வாத்தியார்
இதை பாராட்டி உள்ள நெட்டிசன்கள், காவல்துறைக்கு பரிசளிக்கும் விதமாக கபிலன் மற்றும் ரங்கன் வாத்தியார் ஆகியோர் சைக்கிளில் மாஸ்க் உடன் பயணிக்கும் புகைப்படத்தை தத்ரூபமாக அனுப்பி உள்ளனர். இந்த இரண்டும் வைரலாகி வருகிறது. நல்ல விஷயத்தை இப்படியெல்லாம் சொன்னாத்தான் மக்களுக்கிட்ட போய் சேருது.. சபாஷ் ஈரோடு போலீஸ்..!
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications