5 அடுக்கு பாதுகாப்பு.. ஈரோடு கிழக்கில் இன்று ஓட்டு எண்ணிக்கை..750க்கும் அதிக போலீஸ் குவிப்பு!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 74.79 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தான் சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் அசம்பாவிதங்களை தடுத்து அமைதியான முறையில் ஓட்டு எண்ணிக்கையை நடத்த 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீசார் என 750-க்கும் மேற்பட்டோர் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதையடுத்து தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் திமுக போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் வீதிவீதியாக பிரசாரம் செய்ய தொடங்கினர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பிரசாரம் செய்தனர். தேமுதிக ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலாதா, அவரது சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

அமைதியாக முடிந்த தேர்தல்
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கூறியபடி கடந்த 27 ம் தேதி ஈரோடு கிழக்கில் ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்றது. தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்த 547 வாக்காளர்கள் இருந்த நிலையில் மொத்தம் 74.79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் பிரச்சனைகள், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி இந்த தேர்தல் அமைதியாக முடிவடைந்தது.

இன்று ஓட்டு எண்ணிக்கை
இந்நிலையில் சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேர பாதுகாப்புடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் தான் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்காக 2 அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இன்று மதியம் ரிசல்ட் தெரிந்து விடும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்நிலையில் தான் இன்றைய ஓட்டு எண்ணிக்கையை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டியதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, எஸ்பி சசிமோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி சசிமோகன் சில முக்கிய விஷயங்களை தெரிவித்தார்.

750க்கும் அதிக போலீசார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை இன்று அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக உரிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு 2 கம்பெனி மத்திய போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீசார் என 750-க்கும் மேற்பட்டோர் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொருட்கள் எடுத்து செல்ல தடை
மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முகவர்கள், வேட்பாளர்கள் எந்த பொருட்களையும் எடுத்து செல்ல அனுமதியில்லை. தண்ணீர் பாட்டில், மைபேனா, தீப்பெட்டி போன்ற பொருட்கள் உள்ளே எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் வெற்றி சான்றிதழ் வழங்கும் வரை முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

அடையாள அட்டை கட்டாயம்
பிரச்சனைகள் எதுவுமின்றி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எஸ்பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications