வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
வடமாநிலத்தவர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்களே தமிழக அரசியலை தீர்மானிக்கிறார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்
ஈரோடு: வடமாநிலத்தவர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதி மார்வாடி தொகுதியாகவே மாறிவிட்டது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.
அப்போது அவர் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில் ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கு யார் காரணம். வாக்குக்கு கையேந்தும் நிலைமையில்தான் மக்களை வைத்துள்ளார்கள். தலைவனை மக்கள் தேட வேண்டும்.

இடைத்தேர்தல்
வழியில்லை என சொல்லக் கூடாது, வழியை உருவாக்க வேண்டும். ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்பதெல்லாம் பிம்பம். இதை மக்கள் நினைத்தால் மாற்ற முடியும். இதனால் எந்த கட்சியாக இருந்தாலும் பிடிக்காவிட்டால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். சந்துக்கு சந்து கணக்கெடுத்து காசு கொடுக்கிறார்கள்.

ஆவணப்படம்
ஆவணப்படம் என்ன கற்பனையா, கேரளாவில் அரசு வெளியிடுகிறது. ஆனால் இங்கு அலைபேசியில் பார்ப்பவர்களை கூட கைது செய்துவிடுகிறார்கள். எல்ஐசியின் 30 சதவீத பங்குகள் விற்பனையாகிவிட்டன. பொது நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாகிறது. கடந்த முறை 34 சதவீத மக்கள் வாக்குகளை செலுத்தவில்லை.

ஜிஎஸ்டி
இந்த முறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். இந்த முறை ஈரோட்டில் 12 நாட்களுக்கு மேல் இருந்து தேர்தல் பணி செய்வேன். அரிசி பருப்புக்கு கூட ஜிஎஸ்டி போடப்படுகிறது. இனி வீடு கட்ட முடியாது. வரிதான் கட்ட முடியும். வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக வந்த வீடியோவை பார்த்து எனக்கு வியப்பில்லை.

வடமாநிலத்தவர்கள்
இவர்களால் அதை தடுக்க முடியாது. ஆனால் என்னால் முடியும். பெருந்துறை தொகுதியானது தற்போது மார்வாடிக்கள் இருக்கும் தொகுதியாகிவிட்டது. வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர்கள்தான். சென்னையில் பிச்சை எடுப்பவர்களும் வடமாநிலத்தவர்தான். இதனால் பிச்சை எடுக்கும் வேலை கூட நமக்கு கிடைக்காது போல என சீமான் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications