மோடி மட்டும் மறுபடியும் பிரதமர் ஆயிட்டா.. நாடே இருக்காது.. மொத்தமாக முடிச்சுருவார்.. சீமான்
பாஜக, காங்கிரஸ் மீது நாம் தமிழர் கட்சி சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு: கடந்த 5 வருஷமும் பிரதமர் மோடி எதுவும் செய்யலை. இதில் மறுபடியும் பிரதமர் ஆகிட்டா நாடே இருக்காது, ஒட்டுமொத்தமாக முடித்து விடுவார் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
ஓட்டு போடறாங்களோ, இல்லையோ.. ஆனா சீமான் பேச்சை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் திரண்டு பிரச்சாரத்துக்கு வருகிறது. தமிழக கட்சிகளை பாரபட்சம் பார்க்காமல் அவர் கேட்கும் கேள்விகளே அதற்கு காரணமாக இருக்கலாம்! ஒவ்வொன்றும் பொட்டில் அடித்தாற் போல இருக்கிறது.
இப்படித்தான் வீரப்பன் சத்திரத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவரது அனல் பறந்த பேச்சிலிருந்து சில...

மாற்றம் இருக்கா?
அதாவது, இதுவரைக்கும் எத்தனையோ தேர்தலை நாம் பார்த்தாச்சு.. ஆனா எந்த மாற்றத்தையும் பார்க்கலை. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக, பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக.. இப்படியேதான் போகுது. இதிலிருந்து ஒரு மாற்று ஏற்படதான் "நாம் தமிழர்" என ஏற்படுத்தி இருக்கோம்.

மாற்றம் இருக்கா?
அதாவது, இதுவரைக்கும் எத்தனையோ தேர்தலை நாம் பார்த்தாச்சு.. ஆனா எந்த மாற்றத்தையும் பார்க்கலை. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக, பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக.. இப்படியேதான் போகுது. இதிலிருந்து ஒரு மாற்று ஏற்படதான் "நாம் தமிழர்" என ஏற்படுத்தி இருக்கோம்.

குடும்ப சொத்தா?
ஆட்சியாளர்கள் கொடுக்கிற பணம் வறுமையை போக்கிடுமா? அந்த பக்கம் பொங்கலுக்கு ரேசனில் 1000 ரூபாய் தர்றாங்க.. அதை இந்த பக்கம் டாஸ்மாக் கடையில் வாங்கிக்கிறாங்க. இப்ப அரசியல்வாதிகள் எல்லாம் தங்கள் வாரிசுகளை நட்டு வைக்கிறார்கள். அவங்கள பார்த்து நான் கேட்கிறேன்.. தமிழகம் என்ன உங்கள் குடும்ப சொத்தா? எங்கள் பாட்டன்.. முப்பாட்டான் எல்லாம் உங்களிடம் இதையா கேட்டாங்க?

முடிச்சிடுவார்
50 வருஷமாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வர்ற போற 5 வருஷத்துல என்ன செய்ய போகுது? போன 5 வருஷமாக எதுவும் செய்யாத மோடி திரும்பவும் பிரதமர் ஆயிட்டா மட்டும் என்ன செய்ய போகிறார்? வரும் 5 ஆண்டுகளில் இந்த நாடே இருக்காது.. முடிச்சிடுவார்.

என் கடமை
நான் உங்களிடம் ஓட்டு கேட்க போவதில்லை. எனக்கு ஓட்டுப்போட்டால் போடுங்கள்.. இல்லாவிட்டால் போங்கள்.. ஆனால் நாட்டுக்காக போராட வேண்டியது எனது கடமை" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications